SBI cuts rates on home loans : ஐவங்கிகளுக்கு வழங்கிய கடன் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனை முன்னிட்டு வீட்டுக் கடன் வட்டியை 5 புள்ளிகளுக்கு எஸ்.பி.ஐ வங்கி குறைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் கடந்த 6ம் தேதி நிதிக்கொள்கை குழு மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
SBI cuts rates on home loans : எஸ்.பி.ஐ வங்கி வீட்டுக் கடன் வட்டியில் மாற்றம்
இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதையடுத்து வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

அதற்கு ஏற்றது போல், எஸ்பிஐ வங்கி இப்போது வீட்டுக் கடன் வட்டியில் 5 புள்ளிகளை குறைத்துள்ளது. அதாவது ரூ. 30 லட்சம் வரை பெற்ற வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

இது குறித்து, வங்கியின் தலைவர் ராஜ்னிஷ் குமார் கொடுத்த அறிவிப்பில் “ரிசர்வ் வங்கி அறிவித்த பணக் கொள்கையின் பின்னணியில், வீட்டுக் கடன்கள் வட்டி விகிதங்களை ரூ 30 லட்சம் வரை குறைக்க முன்னணி வகித்தோம்.” என்று தெரிவித்திருக்கிறார்.
எஸ்பிஐ வங்கி கார்டு வைத்திருப்பவரா? உங்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு இது
எஸ்பிஐ வங்கி வீட்டு கடன்களின் சந்தையில் மிக அதிகமான சந்தை பங்கு உள்ளது மற்றும் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட விகிதம் குறைக்கப்படுவதன் மூலம் பெரிய, குறைந்த மற்றும் நடுத்தர-வர்க்க பிரிவுகளை மேம்படுத்துவது பொருத்தமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த மாற்றங்கள் வெள்ளிக்கிழமை முதலே பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.