SBI Withdrawal Limit: எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க? - இதை உடனே படிச்சிட்டு ஏடிஎம் போங்க
SBI ATM Withdrawal Limit : ஏடிஎம் கார்டு இல்லை என்பவர்கள், வங்கிக்கு சென்று கியூவில் நின்று தான் பணம் எடுக்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த முறை மிகவும் உதவிகரமாக இருக்கும்
SBI Daily Cash Withdrawal Limit: எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள், தங்களது எஸ்பிஐ டெபிட் கார்டு, YONO வசதி மூலம் வழக்கத்தை விட அதிக முறை பணம் எடுக்க முடியும். டெபிட் கார்டு மற்றும் YONO மூலம் பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இரு வசதிகளையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
Advertisment
எஸ்பிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் இருந்து, ஏடிஎம் டெபிட் கார்டு மூலம் அல்லாமல், "YONO Cash" வசதி மூலம் பணம் எடுக்க உதவுகிறது. ஏடிஎம் கார்டு இல்லை என்பவர்கள், வங்கிக்கு சென்று கியூவில் நின்று தான் பணம் எடுக்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த முறை மிகவும் உதவிகரமாக இருக்கும். தவிர, ஏடிஎம் கார்டே எனக்கு வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கும் YONO வசதி பணம் எடுக்க உதவுகிறது.
வீடியோ - விண்ணைத் தொட்ட வெங்காய விலை... உரிக்காமலே கண் கலங்கும் மக்கள்
YONO பிளாட்ஃபார்ம் மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ வழங்குகிறது.
அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் தளம்தான் யோனோ. ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் ஐபோன் போன்களுக்கு பிரத்யேகமாக எஸ்பிஐ யோனோ மொபைல் அப்ளிகேஷன்கள் உள்ளன. //www.sbiyono.sbi என்ற இணையதளமும் உள்ளது.
இவற்றின் மூலம் கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன் போன்றவற்றை எளிதாகப் பெறலாம். புதிய கணக்கு தொடங்குவதற்கு வசதி உள்ளது. பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பவது போன்ற பொதுவான பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.
நிரந்தர வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி கணக்குகளைத் தொடங்கி முதலீடு செய்யலாம். ரயில் டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.ஏடிஎம் கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை இந்தியாவில் முதன் முறையாக ஸ்டேட் வங்கி நடைமுறைபடுத்தியுள்ளது.
யோனோ வசதியின் கீழ், வாடிக்கையாளர்கள் ஒரு நாளில் குறைந்தபட்சம் ரூ .500 மற்றும் அதிகபட்சமாக ரூ.20,000 பணம் எடுக்க முடியும். ஒரு முறை பரிவர்த்தனைக்கு தலா ரூ.10,000 அதிகபட்சமாக எடுக்க முடியும்.