SBI New EMV chip and PIN Debit Card : தற்போது புழக்கத்தில் இருக்கும் எஸ்.பி.ஐ வங்கியின் மேக்னடிக் ஸ்ட்ரிப் ஏ.டி.எம். கார்டுகளின் செயல்பாடுகள் வருகின்ற டிசம்பர் 31ம் தேதி முடிவுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளது அந்த வங்கி நிர்வாகம். பொதுவாக வங்கிகளில் நமக்கு தரப்படும் ஏ.டி.எம் கார்ட்கள் மேக்னடிக் ஸ்டிரிப்ஸ் எனப்படும் காந்த புலம் கொண்டு இயங்கும் கார்ட்களாகவே இருக்கும்.
சமீபத்தில் அனைத்து வங்கிகளும் மேக்னடிக் ஸ்டிரிப்ஸ்களுக்கு பதிலாக ஈ.எம்.வி (Europay, Mastercard, and Visa) மற்றும் பின் நம்பர்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் கார்ட்களை பயன்படுத்த வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் கார்ட்கள் அனைத்தையும் கட்டணம் ஏதுமின்றி ஈ.வி.எம். கார்ட்களாக மாற்றிக் கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.
வருகின்ற 31ம் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கியின் பழைய கார்ட்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளில் கொடுத்துவிட்டு புதிய கார்ட்களை வாங்க அறிவுறுத்தியுள்ளது, மேலும் பழைய கார்டுகளை மாற்றாத வாடிக்கையாளர்கள் அதே கார்டுகளை கொண்டு பண பரிவர்த்தனை செய்ய இயலாது. அனைத்து கார்டுகளும் டி- ஆக்டிவேட் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ.