எஸ்.பி.ஐ ஏ.டி.எம் போறீங்களா? கார்டு இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!
SBI Debit Card Charges | எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அதற்கேற்ப வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை வசூலிக்கிறது.
SBI Debit Card Charges | நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை அதிகரிக்க உள்ளது.
Advertisment
இந்தப் புதிய கட்டணங்கள் ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து, “எஸ்.பி.ஐ தனது டெபிட் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து வருடாந்தர பராமரிப்புக் கட்டணமாக ரூ.75 (ஜிஎஸ்டியைத் தவிர்த்து) வசூலிக்கும் என்று வங்கியின் இணையதளமான sbi.co.in-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அதற்கேற்ப வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை வசூலிக்கிறது.
எஸ்.பி.ஐ இணையதளத்தின்படி, அதன் கிளாசிக், சில்வர், குளோபல் மற்றும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கு தற்போதுள்ள ரூ.125 மற்றும் ஜிஎஸ்டியுடன் கூடிய வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள் புதிய நிதியாண்டு முதல் ரூ.200 மற்றும் ஜிஎஸ்டியாக மாற்றியமைக்கப்படும். இதேபோல், யுவா, கோல்ட் மற்றும் காம்போ டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணம் ரூ.250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும பிரிமீயம் பிசினஸ் டெபிட் கார்டு பராமரிப்பு கட்டணம் ரூ.350ல் இருந்து 425+ ஜி.எஸ்.டி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெபிட் கார்டு பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய அல்லது பணத்தை எடுக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“