Advertisment

எஸ்பிஐ-யிடம் இருந்து உங்களுக்காகவே ஒரு அறிவிப்பு. வட்டி இனிமே பாதி தான்

கடன் பெரும்பாலும் 3 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi personal banking

sbi personal banking

sbi deposit interest : நடுத்தர வர்க்கத்துக்கான தங்கம் முதலீட்டுத் திட்டங்கள் பல உள்ளன. இந்நிலையில் ’ரிவாம்ப்டு கோல்ட் டெபாசிட் ஸ்கீம்’ (R-GDS) என்னும் புதிய பிக்சட் டெபாஸிட் திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களைப் பார்ப்போம்.

Advertisment

வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதை பற்றிய விவரங்களை முமுமையாக தெரிந்துக்கொண்டு கடன் பெறுவது சிறந்த ஒன்றாகும். தங்க கடன் மற்றும் தனிநபர் கடன் இரண்டுக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வட்டி விகிதத்தில் தான் கடன் அளிக்கப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் தங்கம் வைத்துள்ளவர்களுக்கு வேகமாகவும், வரம்புகள் ஏதுமின்றியும் கடன் பெற முடியும். அதே நேரம் தனிநபர் கடனில் தங்கம் போன்ற எதையும் நிபந்தனை அல்லது அடைமானமாகப் பெறாமல் கடன் பெற முடியும். இந்தக் கடனை பெற ஒரு சில நாட்கள் தேவைப்படும்.

நகை கடன் அதிகபட்சம் ரூ.1.5 கோடி வரை அளிக்கப்படும். உடனடியாக பணம் தேவைப்படும் நேரங்களில் தங்க கடனே எளிமையாக கிடைக்கும். தங்கள் கடனை ரூ.1000 முதல் பெறலாம்.

சும்மா இல்லை! எஸ்பிஐ -யில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் பண்ண இவ்ளோ ரூல்ஸ் இருக்கு.

தங்க கடன் வாங்கும் போது அதுவே உத்தரவாதம் என்பதால் ’கிரெடிட் ஸ்கோர்’ குறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனால், கடன் தொகை குறிப்பிட்ட அளவிற்கும் அதிகமாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படும். தங்க நகை கடன் பெரும்பாலும் 3 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும்.

தங்க நகை கடனுக்கு அடையாள மற்றும் முகவரி ஆவணத்தினை சமர்ப்பித்தால் போதும் உடனே கடன் கிடைக்கும். வட்டி விகிதம், மாத தவனை போன்றவற்றில் சில சலுகைகள் கிடைக்கும். தங்க நகை அடைமான கடன் பெறும்போது தங்கத்தினை நேரடியாக வங்கியில் சமர்ப்பித்து அதன் சுத்தம் மற்றும் மதிப்பினை கணக்கிட்ட பிறகே கடன் பேற முடியும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment