sbi deposit interest : வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மூதலீடு செய்வது கையிருப்பாக உள்ள பணத்தை வேகமாக பெருக்கவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதன் மூலம் குறைந்த காலத்திற்குள் பணத்தை இரட்டிப்பாக்கும் அளவுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே முக்கியமா வங்கிகள் சிலவற்றில் இத்திட்டத்துக்கு கொடுக்கப்படும் வட்டி விகித அளவு எவ்வளவு எனப் பார்க்கலாம்.
எச்டிஎப்சி:
எச்டிஎப்சி வங்கி இந்தியாவின் தனியார் வங்கிகளில் குறிப்பிடத்தக்கது ஆகும். இதில் 5 கோடி ரூபாய்க்கும் குறைவாக 2 முதல் 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 7.4 சதவீதம் பெறலாம். மூத்த குடிமக்கள் என்றால் கூடுதலாக 0.5 சதவீதம் தரப்படுகிறது.
ஐசிஐசிஐ:
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 290 முதல் 1 ஆண்டு வரை முதலீடு செய்தால் 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது ஐசிஐசிஐ வங்கி. 3 ஆண்டு வரை முதலீடு செய்தால் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு 0.55 சதவீத வட்டி கூடுதலாகப் பெறலாம்.
எஸ்பிஐ:
அனைத்து வகை முதலீடுகளுக்கான வட்டி விகிதங்களை ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.179 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் மீதான வட்டி 0.75 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 0.20 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 கோடி ரூபாய் மற்றும் அதற்கு அதிகமான பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ ஏடிஎம்-மில் எத்தனை முறை வேண்டுமானலும் பணம் எடுக்கலாம்.
ஆக்சிஸ் வங்கி:
9 முதல் 364 நாட்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 7.1 சதவீத வட்டியை வழங்கி வருகிறது ஆக்சிஸ் வங்கி. மூத்த குடிமக்களுக்கு 7.35 சதவீத வட்டியைத் திட்டத்தின் கீழ் தருகிறது. அதிகபட்சம் 7.5 சதவீதம் வரை வட்டி கொடுக்கிறது ஆக்சிஸ் வங்கி.