மினிமம் பேலன்ஸ் பற்றிய கவலையா? அப்ப எஸ்பிஐ வங்கியின் புதிய ஸ்கீம்மை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்!

State Bank Of India New Deposit Scheme: பாரத் ஸ்டேட் வங்கியின் இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

SBI Deposit Scheme: வங்கிகளில்  சேவிங் கணக்குகளை வைத்திருப்போருக்கு இருக்கும் அதிகப்படியான கவலை மினிமம் பேலன்ஸ் குறித்து தான்.   குறிப்பிட்ட தொகையை மினிமம் பேலன்சாக  வைக்கவில்லை என்று வங்கி நிர்வாகம்  அபராதத்தொகையை வசூலிக்கிறது.  இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்புவது? என்பதுதான் வாடிக்கையாளர்கள் பலரது கவலையாக இருக்கிறது. வங்கி வாடிக்கையாளர்களை காப்பாற்றும் வகையில் ஸ்டேட் வங்கி புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

எம்.ஓ.டி.எஸ். எனப்படும் பல்வாய்ப்பு டெபாசிட் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் பற்றி அதிகம் கவலைப்படவேண்டிய அவசியம் இருக்காது. ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் ஏற்கனவே உள்ள சேவிங்ஸ் கணக்குடன் இணைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

State Bank Of India New Scheme, Relief to Minimum Balance Worries: எஸ்.பி.ஐ வங்கியின் புதிய ஸ்கீம்

குறிப்பாக ஸ்டேட் வங்கியில்,  வழக்கமான வைப்புத் தொகை கணக்குகளுக்கு மாற்றமாக, எம்.ஓ.டி.எஸ். அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் ரூ. 1,000-ன் மடங்குகளாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மீதம் உள்ள தொகை சேமிப்பு கணக்கில் வைப்புத் தொகையாக இருக்கும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் குறித்து  வங்கி நிர்வாகம்  வெளியிட்டுள்ள 5 முக்கியமான தகவல்கள்.

1. எம்.ஓ.டி.எஸ் திட்டத்தைப் பொருத்தவரையில்  ஒவ்வொரு அக்கவுன்ட்டிலும் குறைந்தபட்ச பேலன்ஸ் ரூ. 1,000 ஆக இருக்க வேண்டும். அடுத்தடுத்த டெபாசிட் தொகைகள் ரூ. 1,000  மடங்குகளாக இருக்க வேண்டும்.

2. இந்த கணக்குகளுக்கு அதிகபட்ச கால அளவு 5 ஆண்டுகள்.

3. மற்ற திட்டங்களுக்கு என்ன வட்டி விகிதத்தை வழங்குகிறதோ அதே வட்டியை எம்.ஓ.டி.எஸ்.திட்டத்திற்கும் ஸ்டேட் வங்கி வழங்குகிறது. கடந்த ஜூலை 30-ம் தேதியில் இருந்து வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.

4.  எம்.ஓ.டி.எஸ். வங்கி கணக்குகளுக்கு முன்முதிர்வு திரும்ப பெறுதல் பொருந்தும்.

5.   கடன் வசதி இந்த கணக்கில் உள்ளது. ஆனால் இதற்கு ஒருவர் மாதந்தோறும் சராசரி பேலன்சை பராமரிக்க வேண்டும் என்ற கூடுதல் விதியும் நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

பாரத் ஸ்டேட் வங்கியின் இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close