SBI diamond account gives more benefits to business people details here: தொழில் செய்பவர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் நடப்பு கணக்கு (கரண்ட் அக்கவுண்ட்) வசதியை பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழங்குகிறது. அதன் நன்மைகள் மற்றும் எப்படி தொடங்குவது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
பாரத ஸ்டேட் வங்கி, SBI டைமண்ட் நடப்புக் கணக்கின் மூலம் ஒருவரின் வணிகத்தை வளர்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. ஆர்வமுள்ள தொழில் செய்பவர்கள் எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in/ என்ற பக்கத்தில் உள்நுழைந்து ஆன்லைனில் இந்த நடப்பு கணக்கிற்கு விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில், "SBI நடப்புக் கணக்கின் மூலம் உங்கள் வணிகத்தை வளர்த்துக் கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பெறுங்கள்! இன்றே கணக்கைத் திறந்து, பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! மேலும் அறிக: https://sbi.co.in/web/business/sme/current-accounts ," என்று பதிவிட்டுள்ளது.
எஸ்பிஐ டைமண்ட் நடப்புக் கணக்கு என்றால் என்ன?
SBI டைமண்ட் நடப்புக் கணக்கு என்பது, நாடு முழுவதும் உள்ள உயரடுக்கு வணிகர்கள், சிறந்த தொழில் வல்லுநர்கள், பெரிய வர்த்தகர்கள் மற்றும் பலருக்கு, மொத்தப் பணப் பரிவர்த்தனைகளைக் கையாள்வதற்கும், அதிக எண்ணிக்கையிலான பணம் செலுத்துதல் மற்றும் பணப் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதற்குமான சிறந்த வசதியாகும். இது பெரும்பாலான சேவைகளை இலவசமாக அல்லது மிகக் குறைந்த பரிவர்த்தனை செலவில் வழங்குகிறது.
டைமண்ட் நடப்புக் கணக்கின் பலன்கள்
இந்த கணக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இவை பின்வருமாறு:
1) மாத சராசரி இருப்புத் தொகை ரூ. 5 லட்சமாக இருக்க வேண்டும்
2) வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.1 கோடி வரை ரொக்கமாக டெபாசிட் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதையும் படியுங்கள்: பிஎம் கிசான்; மார்ச் 31-க்குள் இதைச் செய்யாவிட்டால் 11-வது தவணை கிடைக்காது
3) கணக்கு தொடங்கப்பட்ட கிளையில் இருந்து இலவச வரம்பற்ற பணம் எடுக்கும் வசதியும் உள்ளது.
4) வாடிக்கையாளர்களுக்கு இலவச RTGS மற்றும் NEFT மூலம் பணம் பெறுதல் மற்றும் பணம் செலுத்துதல் வசதி வழங்கப்படுகிறது
5) இந்தக் கணக்கு வரம்பற்ற இலவச டிமாண்ட் டிராஃப்ட்களையும் வழங்குகிறது.
6) வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 700 மல்டி-சிட்டி செக் லீவ்களை இலவசமாக பெறலாம்.
7) இது ஒரு நாளைக்கு ரூ. 2,00,000 வரை ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வரம்புடன் பிரீமியம் வணிக டெபிட் கார்டை வழங்குகிறது
8) 22000+ எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் பணத்தை எடுக்கவும் டெபாசிட் செய்யவும் இது வசதியை வழங்குகிறது.
9) கணக்கு பாதுகாப்பான, வேகமான கார்ப்பரேட் இணைய வங்கி சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது.
டைமண்ட் கணக்கு தொடங்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ள நபர்கள் SBI டைமண்ட் நடப்புக் கணக்கை தொடங்க எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://sbi.co.in/ மூலம் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில், SBI டயமண்ட் நடப்புக் கணக்கின் 'ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்' விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்ப செயல்முறையை எளிதாக முடிக்கலாம்.
இந்த கணக்கு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய, SBI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://sbi.co.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.