Advertisment

அவசரத் தேவைக்கு வீட்டுக்கே வந்து பணம் கொடுக்கும் எஸ்பிஐ - முழு தகவல் இங்கே

State Bank of India Updates: எஸ்பிஐ இந்த வசதியை பெற 1800111103 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அழைக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi doorstep banking facility

sbi doorstep banking facility

SBI: இந்த ஊரடங்கி நேரத்தில் அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டால் வங்கிகள் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து பணம் தரும். எஸ்பிஐ வங்கி வீட்டு வாசலில் வந்து பணம் தரும் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த வசதி தற்போது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு கிடைக்கிறது. எஸ்பிஐ வங்கி கணக்குதாரர்கள் இந்த வசதியை குறிப்பிட்ட வங்கி கிளைகளில் மட்டும் பெறலாம்.

Advertisment

எஸ்பிஐ வீட்டு வாசலில் வங்கி வசதி குறித்து நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

1.வீட்டு வாசலில் வங்கி சேவையில் பணம் செலுத்த எடுப்பது, பணம் வாடிக்கையாளர்களிடம் கொடுப்பது, cheque எடுப்பது, cheque requisition slip எடுப்பது, form 15H எடுப்பது, drafts கொடுப்பது, delivery of term deposit advice, life certificate எடுப்பது மற்றும் KYC documents எடுப்பது ஆகியவை அடங்கும்.

அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு

2. இந்த சேவையை பெற 1800111103 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணிக்கு உள் அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

3. இந்த சேவை கோரிக்கை பதிவு கணக்குதாரரின் கணக்கு உள்ள வங்கி கிளையில் செய்யப்படும்.

4. Know Your Customer க்கு முழுமையாக இணங்குகிற வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் வீட்டு வாசலில் வங்கி சேவை வழங்கப்படும்.

5. ஒரு முறை வீட்டுக்கு வருவதற்கான சேவை கட்டணம் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 60+GST, நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 100 +GST

6. ஒரு நாளைக்கு ஒரு பரிவர்த்தனை மூலம் ரூபாய் 20,000/- வரை மட்டுமே பணம் எடுக்கவோ அல்லது பணம் போடவோ முடியும்.

7. பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தாங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கி கிளையில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மட்டும் தான் இந்த வசதியை பெற முடியும்.

8. கூட்டாக இயக்கப்படும் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற இயலாது.

9. 18 வயதுக்கு கீழ் உள்ள கணக்குதாரர்கள் மற்றும் non- personal nature உள்ள கணக்குதாரகள் இந்த சேவையை பெற முடியாது.

10. பணம் எடுப்பது cheque அல்லது withdrawal form பயன்படுத்தி passbook உடன் மட்டுமே அனுமதிக்கப்படும்.

எஸ்பிஐ வங்கி தவிர்த்து, ஹெச்டிஎப்சி (HDFC), ஐசிஐசிஐ (ICICI), ஆக்ஸிஸ் (Axis) மற்றும் கொடாக் (Kotak) வங்கி ஆகியவையும் வீட்டு வாசலில் வங்கி சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

வீட்டு வாசலில் வங்கி சேவை எவ்வாறு செயல்படுகிறது.

எஸ்பிஐ இந்த வசதியை பெற 1800111103 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அழைக்க வேண்டும்.

இ.எம்.ஐ. கவலையை விடுங்க: முக்கிய வங்கிகள் லேட்டஸ்ட் அப்டேட் இங்கே!

அழைப்பு எடுக்கப்பட்ட உடன் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கின் இறுதி 4 இலக்கங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

ஆரம்பகட்ட சரிபார்த்தல் முடிந்தவுடன் இணைப்பு Contact Centre Agent க்கு forward செய்யப்படும். இரண்டாவது மற்றும் கூடுதல் சரிபார்ப்புக்கு பிறகு அவர் சேவைக்கான கோரிக்கையை பதிவு செய்வார்.

எந்த வகையான சேவை தேவை என்பதை தெரிவித்து வாடிக்கையாளர் தனக்கு சொளகரியமான நேரத்தையும் தெரிவிக்க வேண்டும்.

கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது வாடிக்கையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment