இந்தியாவின் மிகப்பெரிய பொது துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஒரு மிகப்பெரிய e -ஏலத்தை நடத்த உள்ளதாக கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 1000 வணிக, குடியிருப்பு மற்றும் தொழில் துறை சார்ந்த சொத்துக்கள் இதில் ஏலத்துக்கு வருகின்றன.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட, நீதிமன்ற உத்தரவுகளால் ஜப்தி செய்யப்பட்ட அசையா சொத்துக்களை ஏலத்தில் விடும் போது எஸ்பிஐ வங்கி மிகவும் வெளிப்படைதன்மையோடு நடந்துக் கொள்ளும். அந்த சொத்துக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிவிப்பதால் அது ஏலம் எடுப்பவர்களை ஆர்வத்துடன் ஏலத்தில் கலந்து கொள்ள கவர்ந்திழுக்கும். e- ஏலத்தில் விடப்படும் .
சொத்துக்கள் தொடர்பான விவரங்களை அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்க் மூலமாக தொரிந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வங்கி கிளையிலும் இந்த e- ஏலம் தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளவும், ஏலம் எடுக்க விரும்பும் சொத்து தொடர்பான விவரங்களை ஏலம் எடுப்பவர்கள் தெரிந்து கொள்ளவும் அவர்கள் ஏலத்தில் அவர்கள் எடுக்க விரும்பும் சொத்தை ஆய்வு செய்யவும் அதற்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், என எஸ்பிஐ வங்கியின் இணையதள முகவரியில் sbi.co.in கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.