நீங்கள் ஒரு தொழில் தொடங்க உங்களுக்கு உடனடியாக பணம் தேவையா? இதற்காக உடனடி கடன் வாய்ப்புகளை பரிசீலிக்கிறீர்களா? இதோ உங்களுக்கான எஸ்பிஐ வங்கியின் நற்செய்தி. பாரத ஸ்டேட் வங்கி தொழில் தொடங்க விருப்பமுள்ள நபர்களுக்கு கடன்களை வழங்குகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., சிறு வணிகங்களுக்கு வெறும் 3 நிமிடங்களில் ரூ .50000 வரை கடன் வழங்குகிறது.
இந்த கடன் பெற ஆர்வமுள்ளவர்கள் எஸ்பிஐ-யின் இ-முத்ரா கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் உங்கள் வணிகத்தை மேலும் விரிவாக்கலாம். பிரதான் மந்திரி முத்ரா கடன் திட்டம் என்பது மிகவும் பயனுள்ள திட்டமாகும், இது தொழில் தொடங்க போதுமான பணம் இல்லாதவர்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. எனவே நீங்களும் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்க நினைத்தால் இதுதான் சரியான நேரம்.
எஸ்பிஐ இ-முத்ரா கடன் பெறுவது எப்படி?
எஸ்பிஐ-யின் இ-முத்ரா கடனைப் பெறுவது மிகவும் எளிமையான செயல்முறையாகும். எஸ்பிஐயின் எந்த கிளைக்கும் செல்லாமல், எந்த ஆவணமும் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒருவர் அதைப் பெறலாம்.
இ-முத்ரா கடனின் சிறப்பம்சங்கள்
நீங்கள் ஒரு சிறிய (மைக்ரோ) தொழில்முனைவோராக இருக்க வேண்டும்.
நீங்கள் எஸ்பிஐ வங்கியில் குறைந்தது 6 மாத கால நடப்பு அல்லது சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் அதிகபட்ச கடன் தகுதித் தொகை ரூ .1 லட்சம்.
அதிகபட்ச கடன் கால அளவு 5 ஆண்டுகள்.
வங்கியின் தகுதி அளவுகோல்களின்படி ரூ .50,000 வரை உடனடியாக கடன் கிடைக்கும்.
அதேநேரம், 50,000 ரூபாய்க்கு மேல் உள்ள கடன் வாங்க விரும்புபவர்கள் தேவையான நடவடிக்கைகளுக்காக வங்கி கிளைக்குச் செல்ல வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
நீங்கள் சேமிப்பு அல்லது நடப்பு கணக்கு எண் மற்றும் வங்கி கிளை விவரங்களை கொண்டு வர வேண்டும்.
நீங்கள் வணிகச் சான்றைக் காட்ட வேண்டும் (பெயர், தொடக்க தேதி மற்றும் முகவரி).
UIDAI - ஆதார் எண் (வங்கி கணக்கில் இணைக்கப்பட வேண்டும்).
உங்களது சாதி விவரங்களை (பொது அல்லது SC/ST/OBC அல்லது சிறுபான்மையினர்) குறிப்பிட வேண்டும்.
ஜிஎஸ்டிஎன் மற்றும் உத்யோக் ஆதார் போன்ற பதிவேற்றத்திற்கான பிற விவரங்களும் தேவைப்படும்.
ஜிஎஸ்டிஎன் & நிறுவன தகவல்கள் தேவைப்படும்.
கடை மற்றும் நிறுவனம் அல்லது பிற வணிக பதிவு ஆவணங்கள் இருந்தால் காட்டப்பட வேண்டும்.
தகுதிகள்
எஸ்பிஐ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, நீங்கள் ஒரு சிறிய தொழில்முனைவோராக இருக்க வேண்டும். உங்களிடம் எஸ்பிஐ சேமிப்பு கணக்கு அல்லது நடப்புக் கணக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் இருக்க வேண்டும். கடன் காலம் அதிகபட்சம் 5 வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் எஸ்பிஐ இ-முத்ரா கடனின் கீழ் விண்ணப்பித்தால், வீட்டிலிருந்தப்படியே உங்கள் வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் ரூ .50,000 கடன் பெறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.