sbi emergency loan state bank : இந்த கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரமே அதிகம் கேள்விக்கு உட்படுத்தப்படும் நிலையில் மக்களின் பொருளாதாரம் குறித்து கேட்கவே வேண்டாம். இதுவரை மிடில் கிளாஸ் குடும்பங்களாக இருந்தவர்கள் கூட கொரோனாவால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Advertisment
வங்கிகளில் ஹோம் லோன், கார் லோன், பர்சனல் லோன் வாங்கியவர்கள் இஎம்ஐ கட்ட வேண்டியது அவசியம். இந்த நிலையில், தங்களால் இந்த நிலையில் இஎம்ஐ கட்ட முடியாது என்று நினைப்பவர்களுக்கு இந்த செய்தித்தொகுப்பு கட்டாயம் உதவும். எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியவர்கள் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
sbi emergency loan state bank : என்ன செய்ய வேண்டும்?
கடன் தவனை செலுத்துவதில் மூன்று மாத அவகாசம் குறித்து எஸ்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது. மூன்று மாதகாலம் நீங்கள் இ.எம்.ஐ நினைத்து கவலைக்கொள்ள வேண்டாம். இது குறித்தான முடிவை கடன் வாங்கியவர் தான் எடுக்க வேண்டும். எல்லா மாதமும் கடன் தவனைத் தொகையை எடுத்துக் கொள்ள நீங்கள் எஸ்பிஐ வங்கியிடம் standing instruction கொடுத்திருந்தால், நீங்கள் வங்கியிடம் தெரிவிக்கும் வரை அது தொடர்ந்து நடைபெறும். உங்களுக்கு 3 மாத அவகாசம் வேண்டுமென்றால் நீங்கள் வங்கிக்கு மின்னஞ்சல் மூலம் அதை தெரிவிக்க வேண்டும்.
உங்கள் சேமிப்பு கணக்கில் பணமிருந்து நீங்கள் வங்கிக்கு standing instruction கொடுத்திருந்தால், பணம் தொடர்ந்து கடன் தவனைக்காக எடுக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கியின் MD – Retail & Digital Banking C. S. Setty அவர்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான விவரங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil