நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அம்ரித் கலாஷ் சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தின் (FD) செல்லுபடி காலத்தை நீட்டித்துள்ளது.
அதன்படி இந்தத் திட்டம் 2023 டிசம்பர் 31ஆம் தேதிவரை கிடைக்கும். இந்தத் திட்டம் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கப்பட்டது.
அம்ரித் கலாஷ் வட்டி
எஸ்பிஐ இணையதளத்தின்படி, இந்த 400 நாள் டெர்ம் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 7.1% அகும். இதுவே மூத்தக் குடிமக்களுக்கு 7.6% ஆகும்.
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்
7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு எஸ்பிஐ பொது வாடிக்கையாளர்களுக்கு 3% முதல் 7.1% வரை வட்டி வழங்கப்படுகிறது.
இந்த வைப்புத்தொகையில் மூத்த குடிமக்கள் 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) கூடுதலாகப் பெறுவார்கள்.
- அதன்படி,
- 7 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை - 3%
- 46 நாள்கள் முதல் 179 நாள்கள் வரை - 4.5%
- 180 நாள்கள் முதல் 210 நாள்கள் வரை - 5.25%
- 211 நாள்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது - 5.75%
- 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாக - 6.8%
- 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 7.00%
- 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை - 6.5%
- 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 6.5%
- 400 நாள்கள் அம்ரித் கலாஷ்-7.10 சதவீதம்
எஸ்.பி.ஐ நிகர லாபம்
பொதுத்துறை வங்கி நிதியாண்டின் முதல் காலாண்டில் ₹18,736 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. வங்கியின் சந்தை மூலதனம் ₹5,12,451.22 கோடி ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“