நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.,யின் பிக்ஸட் டெபாசிட் வட்டியை கணக்கீடுவது குறித்து பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும். நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இந்த வங்கி கிளைகளை கொண்டுள்ளது.
இந்த வங்கி தற்போது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு (டெபாசிட்) 5.65 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 6.45 சதவீதம் அதிகாரப்பூர்வ வட்டி வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் வட்டி மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்ட தகவல்களை அறிய வங்கி கால்குலேட்டரை இவ்வாறு பயன்படுத்தலாம்.
இந்தத் திட்டத்தில் ரூ.1லட்சம் முதலீடு செய்தால் கிட்டத்தட்ட ரூ.1.80 லட்சம் ரிட்டன் ஆக கிடைக்கும். இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
- முதலில் எஸ்.பி.ஐ வங்கி டெபாசிட் (SBI FD) கால்குலேட்டரை https://sbi.co.in/web/student-platform/maturity-value-calculator இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்.
- நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் அசல் தொகையை உள்ளிடவும்.
- நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் காலத்தை உள்ளிடவும். இது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கலாம்.
- எதிர்பார்க்கப்படும் வருடாந்திர வட்டி விகிதத்தை உள்ளிடவும். SBI இணையதளத்தில் உங்கள் டெபாசிட்டுக்கான பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தைக் காணலாம்.
- நீங்கள் அனைத்து தகவல்களையும் வழங்கியவுடன், கால்குலேட்டர் முதிர்வு மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வட்டியின் மதிப்பைக் காண்பிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“