ஸ்டேட் வங்கி வட்டி விகிதம்: பணத்தைப் போடும் முன் இதைத் தெரிஞ்சுகோங்க!

State Bank Of India: 7 நாள் முதல் 45 நாட்கள் வரை வழங்கப்பட்டு வந்த 5.75 சதவீத வட்டி விகிதம், 5 சதவீதமாக குறைப்பட்டுள்ளது.

sbi fixed deposit, sbi fd rates, sbi e mudra, sbi customer care, sbi recruitment, எஸ்பிஐ வங்கி , ஸ்டேட் வங்கி
sbi fixed deposit, sbi fd rates, sbi e mudra, sbi customer care, sbi recruitment, எஸ்பிஐ வங்கி , ஸ்டேட் வங்கி

SBI FD Rates: இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பல்வேறு பிரிவுகளின் கீழ் செய்யப்படும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டியைக் குறைத்தது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில், இது வரையில் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி 7 நாள் முதல் 45 நாட்கள் வரை வழங்கப்பட்டு வந்த 5.75 சதவீத வட்டி விகிதம், 5 சதவீதமாக குறைப்பட்டுள்ளது. அதே போல் 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான பிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கான வட்டி 6.25 சதவீகிதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டது.


மேலும் 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.35 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 211 நாட்கள் முதல் ஒராண்டுக்குள் உள்ள டெபாசிட்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம், 6.40 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI FD Rates: ஸ்டேட் வங்கி ஃபிக்சட் டெப்பாசிட்

மேலும் எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1 முதல 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி 7 சதவீதத்தில் இருந்து 6.80 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதோடு, 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 6.70 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

6.70 சதவீத்தில் இருந்து 6.60 சதவீதமாக 3 முதல் 5 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி 6.60 சதவீத்தில் இருந்து 6.50 சதவீதமாக குறைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு கூடுதல் வட்டி விகிதங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த வட்டி மாற்றம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த போதும் பலருக்கும் இது குறித்து முழுமையான விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை எனக் கூறப்படுகின்றது. எனவே அது குறித்து வங்கிகளுக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi fd rates sbi fixed deposit state bank of india net banking

Next Story
ஆக்சிஸ் பேங்க் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு… மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் !axis bank, Axis Bank Interest rate Axis net banking axis atm services Axis bank latest updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X