SBI FD Rates: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எனப்படும், எஸ்.பி.ஐ வங்கி நிலையான வைப்பு விகிதங்களை (Fixed Deposit Rates) மேலும் குறைப்பதாக அறிவித்துள்ளது. ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக குறைத்துள்ளது எஸ்.பி.ஐ. சில்லறை விகிதங்களை 10 முதல் 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ள எஸ்.பி.ஐ, அதே நேரத்தில் மொத்த வைப்புத்தொகையும் பங்குதாரர்களிடையே 30-70 அடிப்படை புள்ளி வரையில் குறைத்துள்ளது.
இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் ஆகஸ்ட் 26 முதல் நடைமுறைக்கு வருகின்றன. நிலையான வைப்புத்தொகையின் சமீபத்திய வீதக் குறைப்பு வீழ்ச்சியடைந்த வட்டி வீத சூழ்நிலை மற்றும் உபரி பணப்புழக்கம் ஆகியவற்றை எஸ்பிஐ மேற்கோளிட்டுள்ளது. இதற்கு முன்பு எஸ்.பி.ஐ திருத்திய விகிதங்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வீதத்தை இந்த மாதத்தில் 35 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது, இந்த ஆண்டின் நான்காவது குறைப்பு.
SBI FD Rates: புதிய வைப்புத் தொகை விகிதங்கள் (2 கோடிக்கு கீழ்)
7 - 45 நாட்கள் வரை- 4.50%
46 - 179 நாட்கள் வரை- 5.50%
180 - 210 நாட்கள் வரை - 6.00%
211 - ஓராண்டு வரை 6.00%
1 - 3 ஆண்டுகள் வரை ( 2 கோடிக்குக் கீழே)
1 முதல் 2 ஆண்டுகள் வரை - 6.70%
2 முதல் 3 ஆண்டுகள் வரை - 6.50%
3 - 10 ஆண்டுகள் வரை ( 2 கோடிக்குக் கீழே)
3 முதல் 5 வருடங்களுக்கும் குறைவாக - 6.25%
5 முதல் 10 ஆண்டுகள் வரை - 6.25%
SBI FD Rates SBI Online: சீனியர் சிட்டிசன்களுக்கு
வைப்புத் தொகையில், வட்டி விகிதங்களை விட கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகளைப் பெறுகிறார்கள் மூத்த குடிமக்கள். ஆகஸ்ட் 26 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய விகிதத்தில், பொது வாடிக்கையாளர்களும் மூத்த குடிமக்களும் அடங்குவர். அதன்படி, 7 முதல் 45 நாட்களுக்கு, 5.00%-ஐ எஸ்.பி.ஐ வழங்கும். 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக இருக்கும் டெபாசிட்களுக்கு, 6.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது எஸ்.பி.ஐ.
7 முதல் 45 நாட்கள் வரை- 5.00%
46 முதல் 179 நாட்கள் வரை - 6.00%
180 முதல் 210 நாட்கள் வரை - 6.50%
211 முதல் 1 ஆண்டு வரை - 6.50%
1 - 3 ஆண்டுகள் வரை ( 2 கோடிக்குக் கீழே)
1 முதல் 2 ஆண்டு வரை - 7.20%
2 முதல் 3 வருடங்களுக்கும் குறைவாக - 7.00%
3 - 10 ஆண்டுகள் வரை ( 2 கோடிக்குக் கீழே)
3 முதல் 5 வருடங்களுக்கும் குறைவானது - 6.75%
5 முதல் 10 ஆண்டுகள் வரை - 6.75%
இருப்பினும், சேமிப்பு வங்கி வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள எஸ்.பி.ஐ, 1 லட்சத்துக்கு மேல் நிலுவை உள்ள வாடிக்கையாளர்களுக்கு தற்போதுள்ள 3.00% வட்டியையே மெயிண்டெயின் செய்ய முடிவெடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.