பிக்சட் டெபாசிட் திட்டங்கள் எந்தவித பயமும் இன்றி பலரும் நம்பி முதலீடு செய்யும் திட்டமாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பேரில், குறைந்த கால பிக்சட் டெபாசிட் அல்லது நீண்ட கால பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். வங்கிகள் மட்டுமின்றி தபால் அலுவலகமும் நல்ல வட்டி விகிதத்துடன் பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இதன் வட்டி விகிதமும் சந்தை நிலவரம், அரசு கொள்கை கருத்தில் கொண்டு ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றப்படும்.
பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்குவதற்கு, சிறந்த நிறுவனத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்பிஐ உள்ளது. இங்கு குறைந்தப்பட்சம் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை பிக்சட் டெபாசிட் திட்டங்களை தொடங்கலாம். சுமார் 45 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள எஸ்பிஐ, பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மக்களின் முதல் சாய்ஸாக திகழ்கிறது.
இருப்பினும், போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் சிறந்ததா? எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் சிறந்ததா என்ற கேள்வி நிச்சயம் வரும். அதற்கான விடையை கீழே காணுங்கள்
போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் ரெட்
போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றுவது வழக்கம். ஆனால், கடந்த 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி வட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை. 1 ஆண்டிற்காக பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.5 சதவீத வட்டி முதல் 6.7 வரை செல்கிறது.
பிக்சட் டெபாசிட் காலம் | வட்டி விகிதம் |
1 ஆண்டு | 5.5 சதவீதம் |
2 ஆண்டு | 5.5 சதவீதம் |
3 ஆண்டு | 5.5 சதவீதம் |
5 ஆண்டு | 6.7 சதவீதம் |
எஸ்பிஐ பிக்சட் டெபாசிட்
போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டங்களை காட்டிலும், எஸ்பிஐ-யில் வாடிக்கையாளர்களுக்கு அதிக விருப்பம்கள் உள்ளன. போஸ்ட் ஆபீஸில் மினிமம் பிக்சட் டெபாசிட் காலம் 1 ஆண்டு ஆகும். ஆனால், எஸ்பிஐயில் 7 நாள்கள் முதலே ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு பிக்சட் டெபாசிட் காலத்திற்கு ஏற்ப வட்டியில் மாற்றமிருக்கும்.
பிக்சட் டெபாசிட் காலம் | வட்டி விகிதம் |
7 முதல் 45 நாள் வரை | 2.9 சதவீதம் |
46 முதல் 179 நாள் | 3.9 சதவீதம் |
180 முதல் 210 நாள் | 4.4 சதவீதம் |
211 முதல் 1 ஆண்டு வரை | 4.4 சதவீதம் |
1 முதல் 2 ஆண்டு வரை | 5 சதவீதம் |
3 ஆண்டு | 5.1 சதவீதம் |
3 முதல் 5 ஆண்டு வரை | 5.3 சதவீதம் |
5 முதல் 10 ஆண்டு வரை | 5.4 சதவீதம் |
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.