sbi-fixed-deposit | நிலையான வைப்புத்தொகை (FD) என்பது உத்தரவாத ரிட்டன் திட்டமாகும். இதில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகக் கருதி பணத்தை முதலீடு செய்கிறார்கள்.
எல்லா இடங்களிலும் வெவ்வேறு காலகட்டங்களுக்கு வங்கி அல்லது தபால் அலுவலகத்திலும் ஃபிக்ஸட் டெபாசிிட் (FD) செய்யலாம். வட்டி விகிதங்களும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும்.
எஸ்பிஐ எஃப்டி வட்டி விகிதங்கள்
7 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை - 3.00%
180 நாள்கள் முதல் 210 நாள்கள் வரை - 5.25%
211 நாள்களுக்கு மேல் ஆனால் 1 வருடத்திற்கும் குறைவானது - 5.75%
1 வருடத்திற்கு மேல் ஆனால் 2 வருடங்களுக்கும் குறைவானது - 6.80%
2 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 3 ஆண்டுகளுக்கு குறைவாக - 7.00%
3 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்கு குறைவாக - 6.50%
5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 6.50%
400 நாள்கள் அமிர்த கலாஷ் வைப்புத் திட்டம் - 7.10%
நீங்கள் எஸ்பிஐ எஃப்.டி.யில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்ய விரும்பினால், 1, 2, 3, 5 மற்றும் 10 ஆண்டுகளில் உங்கள் தொகை எவ்வளவு அதிகரிக்கும் என்பதை எஸ்பிஐ (SBI) எஃப்.டி கால்குலேட்டரின் படி தெரிந்துகொள்ளுங்கள்-
5.75% FD மீது 1 வருடம் வரை வட்டி - ரூ 5,29,376
6.80% வட்டியுடன் FD 2 ஆண்டுகள் வரை - ரூ 5,72,187
7.00% வட்டியுடன் FD 3 ஆண்டுகள் வரை - ரூ 6,15,720
6.50% வட்டியுடன் 5 ஆண்டுகள் வரை FD இல் - ரூ 6,90,210
10 ஆண்டுகள் வரை FD மீது 6.50% வட்டியுடன் - ரூ 9,52,779
மூத்தக் குடிமக்கள்
6.25% வட்டியுடன் 1 வருடம் வரை - ரூ 5,31,990
2 வருடங்கள் வரை FD மீது 7.30% வட்டி - ரூ 5,77,837
7.50% வட்டியுடன் 3 ஆண்டுகள் வரை - ரூ 6,24,858
7.00% எஃப்.டி மீது 5 ஆண்டுகள் வரை - ரூ 7,07,389
10 ஆண்டுகள் வரை எஃப்.டி மீது 7.50% வட்டி - ரூ 10,51,175
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“