எஸ்பிஐ வங்கியில் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் சிறப்பாக உள்ளன. பொதுத்துறை வங்கியானது, 2022, டிசம்பர் மாதம் 13ஆம் தேதி முதல், வைப்பாளர்களுக்கான பல்வேறு தவணைக்காலங்களின் FD விகிதங்களைத் திருத்தி உள்ளது.
SBI நிலையான வைப்பு விகிதங்களில் சமீபத்திய திருத்தம் மூலம், SBI மூத்த குடிமக்கள் வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு 7.25% வரை வட்டி பெறலாம்.
மூத்த குடிமக்களுக்கு SBI வழங்கும் வெவ்வேறு FD விகிதங்கள் பின்வருமாறு: (இது ரூ. 2 கோடிக்குக் குறைவான FDகளுக்குப் பொருந்தும்).
- 7 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை: வங்கி இப்போது 13-12-2022 முதல் மூத்த குடிமக்களுக்கு 3.5% வட்டியை வழங்குகிறது.
- 46 நாள்கள் முதல் 179 நாள்கள் வரை: வங்கி இப்போது 13-12-2022 முதல் மூத்த குடிமக்களுக்கு 5% வட்டியை வழங்குகிறது.
- 180 நாள்கள் முதல் 210 நாள்கள் வரை: வங்கி இப்போது 13-12-2022 முதல் மூத்த குடிமக்களுக்கு 5.75% வட்டியை வழங்குகிறது.
- 211 நாள்கள் முதல் 1 வருடம் வரை: வங்கி இப்போது மூத்த குடிமக்களுக்கு 6.25% வட்டியை 13-12-2022 முதல் வழங்குகிறது.
- 1 வருடம் முதல் 2 வருடங்கள் வரை: வங்கி இப்போது மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டியை 13-12-2022 முதல் வழங்குகிறது.
- 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: வங்கி இப்போது 13-12-2022 முதல் மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டியை வழங்குகிறது.
- 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: வங்கி இப்போது மூத்த குடிமக்களுக்கு 6.75% வட்டியை 13-12-2022 முதல் வழங்குகிறது.
- 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை: வங்கி இப்போது மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டியை 13-12-2022 முதல் வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil