எச்டிஎஃப்சி வங்கி அதிக வட்டி விகிதங்களுடன் இரண்டு சிறப்பு நிலையான வைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதே வேளையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதன் வாடிக்கையாளர்களுக்கு 10% FD வட்டி விகிதத்தை வழங்கிய காலமும் கடந்த காலங்களில் இருந்தது.
Advertisment
எஸ்பிஐ வைப்பு வட்டி விகிதங்களின் சுவாரஸ்யமான வரலாறு மறுபரிசீலனைக்கு தகுதியானது. ஏனெனில் தற்போது, பல வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் இன்னும் சில உயர்வுகளுக்கு இடம் இருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர். சமீபத்தில், ஒரு சிறிய நிதி வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டு வைப்புத்தொகைக்கு 9.6% மற்றும் மற்றவர்களுக்கு 9.1% வட்டி விகிதத்தை அறிவித்தது.
இந்த நிலையில் எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் 1 ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான வட்டி விகிதம் ஆகஸ்ட் 16, 2008 அன்று 10% ஆக நிர்ணயிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. 2008 ஆனால் பின்னர் குறைக்கப்பட்டது. இந்த தவணைக்காலத்திற்கு SBI வழங்கும் தற்போதைய FD விகிதம் 6.8% ஆகும்.
எஸ்பிஐ கடந்தகால வட்டி விகிதம்
2008 முதல் பல சந்தர்ப்பங்களில், SBI வெவ்வேறு தவணைக்காலங்களின் FDகளுக்கு 9%க்கும் மேல் வட்டியை வழங்கி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், பொதுத் துறை வங்கியானது எந்தவொரு தவணைக்காலத்தின் FD களுக்கும் பொதுக் குடிமக்களுக்கு 7.1% க்கும் அதிகமான வட்டியை வழங்கவில்லை. அது குறித்து பார்க்கலாம்.
தற்போதைய வட்டி விகிதம்
தற்போது, அம்ரித் கலாஷ் வைப்புத் திட்டத்தின் கீழ் பொதுக் குடிமக்களுக்கு SBI வழங்கும் மிக உயர்ந்த FD விகிதம் 7.1% ஆகும். 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவான வைப்புத்தொகைகளுக்கு வங்கி 7% வட்டியையும் பொது மக்களுக்கு வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு SBI வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதம் 400 நாட்களுக்கு அம்ரித் கலாஷ் வைப்புத்தொகையின் கீழ் 7.6% ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“