bank news, SBI news, SBI Yona, Yona State Bank of India
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) யில் நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு இப்போது சற்று குறைவாகவே வட்டி கிடைக்கும். பிப்ரவரி 10 முதல், 181 நாட்களுக்கு மேல் உள்ள அனைத்து வைப்பு நிதி முதலீடுகளுக்கான வைப்பு காலங்களுக்கு, வட்டி விகிதங்களை எஸ்பிஐ குறைத்துள்ளது. ஒரு வருட நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) க்கான வட்டி விகிதம் முன்பிருந்த 6.10 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்கோ (REPCO) வட்டி விகிதத்தை நிலையாக வைத்திருந்த போதும் வட்டி விகித மாற்றம் என்பது கீழ்நோக்கியே செல்கிறது.
Advertisment
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
எஸ்பிஐ ’யின் ஒரு வருடத்துக்கான நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.10 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றில் இருந்து இரண்டு வருடங்களுக்குள், இரண்டிலிருந்து மூன்று வருடங்களுக்குள், மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் மற்றும் ஐந்திலிருந்து பத்து வருடங்களுக்குள்ளான அனைத்து வைப்புகளுக்கும் (deposits), இதே வட்டி விகிதம் தான் பொருந்தும். மூத்த குடிமக்களுக்கு முன்பிருந்ததை போல் 0.5 சதவிகிதம் கூடுதல் வட்டி தொடரும்.
Advertisment
Advertisements
எஸ்பிஐ யின் குறைந்த வைப்பு கால அளவில் உள்ள வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் - ஏழு முதல் 179 நாட்களுக்கான நிரந்தர வைப்பு நிதி போன்றவற்றிற்கான வட்டி விகிதங்கள் முன்பிருந்தது போலவே தொடரும். இந்த புதிய வட்டி விகிதங்கள் புதிதாக துவங்கப்படும் சேமிப்புகள் மற்றும் முதிர்சியடைந்த வைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
அதே போல் சேமிப்பு கணக்கு வைப்புகளுக்கான வட்டிவிகிதத்தில் முன்பு எஸ்பிஐ வங்கி சிறு திருத்தம் செய்திருந்தது. செப்டம்பர் 1, 2019 முதல் வங்கி இருப்பு ஒரு லட்சம் வரை உள்ள, சேமிப்பு கணக்கு வைப்புகளுக்கான வட்டி விகிதம் 3.5 சதவிகிதமாக இருந்தது. ஆனால் நவம்பர் 1, 2019 முதல் வங்கி இருப்பு ஒரு லட்சம் வரை உள்ள சேமிப்பு கணக்கு வைப்புகளுக்கான வட்டி விகிதம் 3.25 சதவிகிதமாகும். அதே சமயம் ஒரு லட்சத்துக்கு மேல் வங்கி இருப்பு உள்ள வங்கி சேமிப்பு வைப்புகளுக்கான வட்டி விகிதம் முன்பிருந்ததை போல ஆண்டுக்கு 3 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”