sbi fixed deposit interest rate : ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை பாதுகாப்பாகவும் பெரிய லாபத்துடனும் பெருக்கும் மிகச் சிறந்த திட்டம் தான் ‘பிக்சட் டெபாசிட்’ இந்த திட்டத்தில் சேமித்தவர்கள் 10 ஆண்டுகளில் கோடிஸ்வர்கள் லிஸ்டில் இணைந்துள்ளனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
சேமிப்பு, முதலீடுதான் நம் பொருளாதார அஸ்திவாரத்தை வலுவாக்கும். மாடு மாறி உழைத்தால் மட்டும் போதாது உழைக்கு பணத்தை சேமிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சேமிக்கும் போதே எப்படி அதில் லாபம் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகளில் உங்களிடம் உள்ள பணத்தை வேகமாக இரட்டிப்பாக்க முடியும் என்றாலும் அவற்றில் ‘ரிஸ்க்’ உண்டு. ஆனால் வங்கிகளில் தொட்ர் வைப்பு நிதி என்று அழைக்கப்படும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் எந்தவித ரிஸ்க்கும் கிடையாது.
உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஆண்டுக்கு 8 சதவீதம் லாபம் அளிக்கக்கூடிய ஒரு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடத்துக்கு முதலீடு செய்யுங்கள்.
இப்படிச் செய்யும்போது நீங்கள் முதலீடு செய்த ஒரு லட்சம் ரூபாய், ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கும். எப்படி என்று கேட்கிறீர்களா? வங்கி உங்களுக்கு அளிக்கும் வட்டி தான் இதற்கு காரணம்.
மேலும் படிக்க.. கனரா வங்கியில் பிக்சட் டெபாசிட் தொடர்கிறீர்களா? அப்ப அதிர்ஷ்டசாலி நீங்க தான்!
சாதரண சேமிப்பு வட்டியை விட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி மிகவும் அதிகம். அதிலும் பொதுத்துறை வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தை போன்று சிறந்தது வேறு ஏதுவுமில்லை. சரி இன்று மிகப் பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ, பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு வழங்கும் வட்டிவிகிதம் எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ளலாமா?
211- 364 நாட்கள் திட்டம் : 6.40% முதல் 6.90% வரை வட்டி
1 வருடம் முதல் 1 வருடம் 364 நாட்கள் திட்டம் : 6.80% முதல் 7.30% வரை வட்டி
2 வருடம் முதல் 2 வருடம் 364 நாட்கள் திட்டம் : 6.80% முதல் 7.30% வரை வட்டி
5 வருடம் முதல் 10 வருடம் திட்டம் : 6.85% முதல் 7.35% வரை வட்டி
3 வருடம் முதல் 4 வருடம் 364 நாட்கள் திட்டம் : 6.80% முதல் 7.30% வரை வட்டி