பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் : அதிரடியாக குறைத்தது எஸ்பிஐ
Latest SBI FD Interest Rates : எஸ்பிஐ வங்கி, பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய வட்டிவிகிதம், 2020 ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
Latest SBI FD Interest Rates : எஸ்பிஐ வங்கி, பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய வட்டிவிகிதம், 2020 ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
SBI FD interest rates January 2020: எஸ்பிஐ வங்கி, பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய வட்டிவிகிதம், 2020 ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தங்களது வங்கியில் பிக்சட் டெபாசிட் வைத்துள்ள பயனாளர்களுக்கு வழங்கிவந்த வட்டிவிகிதத்தில் மாற்றம் செய்துள்ளது.
Advertisment
Advertisements
நீண்டகால பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டிவிகிதம் 0.15 சதவீதம் அல்லது 15 அடிப்படை புள்ளீகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிவிகித குறைப்பு 1 முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 ஆண்டு கால அளவிலான பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 6.25 சதவீதம் இருந்த நிலையில், தற்போது அது 6.15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1 முதல் குறைந்தது 2 ஆண்டுகள், 2 முதல் குறைந்தது 3 ஆண்டுகள், 3 முதல் குறைந்தது 5 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்களின் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேபோல் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்டு வரும் 0.5 சதவீத வட்டி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்குகளில், ரூ.1 லட்சம் வரையிலான இருப்புத்தொகைக்கு 3.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்ட நிலையில், நவம்பர் 1,2019 முதல் அது 3.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. பின் 3 சதவீதமாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.