State Bank of India SBI deposit rates slashed: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, குறுகிய கால மற்றும் நீண்ட கால டெபாசிட்களின் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. வட்டி வீதத்தின் வீழ்ச்சி மற்றும் உபரி பணப்புழக்கத்தின் காரணமாக, இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறுகிய கால ( அதாவது 179 நாட்களுக்கு உட்பட்ட ) டெபாசிட்களுக்கு 50 முதல் 75 அடிப்படை புள்ளிகள் அளவிற்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால டெபாசிட்களில், ரீடைல் செக்மெண்ட் பிரிவிற்கு 20 அடிப்படை புள்ளிகளும், பல்க் செக்மெண்ட்டிற்கு 35 அடிப்படை புள்ளிகள் அளவிற்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ரூ. 2 கோடி மதிப்பிற்கு கீழான டெபாசிட்களின் வட்டி விகிதங்கள்
SBI Fixed Deposit Rates
ரூ. 2 கோடி முதல் 10 கோடி வரையிலான டெபாசிட்களின் வட்டி விகிதங்கள்
SBI Fixed Deposit Rates
இந்த புதிய வட்டி விகிதங்கள், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.