SBI fraud, sbi account lock, onlinesbi, sbi online, sbi internet banking, SBI, State Bank of India, Personal Finance, SBI news,SBI news in tamill SBI latest news, SBI latest news
SBI News: கரோனா வைரஸ் நெருக்கடி தீங்கிழைப்பவர்களால் மக்கள் மத்தியில் பீதியை பரப்புவதற்கும் அவர்களின் பணத்தை கொள்ளையடிக்கவும் பயன்படுத்தபடுகிறது. மார்ச் மாதத்தில் மட்டும் phishing தாக்குதல்கள் இந்தியாவில் 667 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக Barracuda Networks தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் கோவிட்-19 கருப்பொருளைப் பயன்படுத்தி மோசடி (scamming), பிராண்ட் ஆள்மாறாட்டம் (brand impersonation) மற்றும் வணிக மின்னஞ்சல் சமரசம் (business email compromise) ஆகிய மூன்று வகையான phishing தாக்குதல்கள் நடந்துள்ளதாக Barracuda Networks தங்களது ஆய்வில் கண்டிருக்கிறார்கள்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சில காலத்திற்க்கு முன்பு ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டையை படியெடுத்து (cloning) அவர்களது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டு ஒரு மோசடி நடைப்பெற்றது. இந்த சம்பவம் மும்பையில் நடைபெற்றது. மோசடி நடைபெற்ற அனைத்து அட்டைகளிலும் EMV chip இருந்தது.
Advertisment
Advertisements
இந்த நாட்களில் இணைய வங்கி சேவை வங்கி வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. இது அவர்களை மேலும் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்துகிறது அதுவும் குறிப்பாக நகர்புறங்களில். பயனர்களின் இணைய வங்கி விவரங்களை அணுக சைபர் குற்றவாளிகள் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ள ஒரு அம்சம் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கிறது.
உங்கள் வங்கி கணக்கின் சிறந்த கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு நீங்கள் உங்களுடைய INB access ஐ 'Lock & Unlock User' இணைப்பின் மூலம் lock அல்லது unlock செய்யலாம். இது Home/Login Page ல் உள்ளது, என எஸ்பிஐ தனது அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் கூறியுள்ளது. குறிப்பாக இந்த அம்சத்தை retail users மட்டும்தான் பயன்படுத்த முடியும் corporate users பயன்படுத்த முடியாது.
எஸ்பிஐ இணைய வங்கி அணுகலை எவ்வாறு lock செய்வது
1. onlinesbi.com என்ற எஸ்பிஐ யின் அதிகாரப்பூர்வ தளத்துக்கு செல்லவும்.
2. 'Lock & Unlock User' என்ற விருப்ப தேர்வை தேடுங்கள்
3. இணைய வங்கி சேவை username, வங்கி கணக்கு எண், captcha code போன்ற விவரங்களை கொடுக்கவும்.
4. drop-down menu ல் இருந்து 'Lock user access' என்ற விருப்ப தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
5. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து விட்டு சரிப்பார்ப்புக்காக ’OK’ என்பதை சொடுக்கவும்.
6. உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
7. உங்களுடைய இணைய வங்கி அணுகலை lock செய்ய சரியான OTP ஐ உள்ளீடு செய்யவும்.
பின்னர் 'onlinesbi' இணையதளம் மூலமாகவோ அல்லது வங்கி கிளை மூலமாகவோ அணுகலை (access) unlock செய்யலாம். இணைய வங்கி வசதியை உங்கள் கணக்கு உள்ள வங்கி கிளையின் மூலம் unlocking செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil