SBI vs HDFC vs ICICI: சும்மா பணத்தை போட்டுட முடியுமாங்க... எது பெஸ்ட்-னு பாருங்க!
SBI : பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகளான ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சமீபத்தில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிரந்தர வைப்பு நிதி திட்டங்களை தொடங்கியுள்ளன
SBI : பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகளான ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சமீபத்தில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிரந்தர வைப்பு நிதி திட்டங்களை தொடங்கியுள்ளன
SBI, fxed depostis,interest rates, senior citizens, icici bank, hdfc bank, Senior citizens special FD scheme,Special Senior citizens FD scheme,SBI special FD scheme for senior citizens,ICICI Bank special FD scheme for senior citizens,HDFC Bank special FD scheme for senior citizens,SBI We Care,HDFC Senior Citizen Care,ICICI Bank Golden Years,SBI FD rates for senior citizens,ICICI Bank FD rates for senior citizens,HDFC Bank FD rates for senior citizens
Bank News: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகளான ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சமீபத்தில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிரந்தர வைப்பு நிதி திட்டங்களை தொடங்கியுள்ளன. கரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட்டி விகிதங்கள் வேகமாக குறைந்து வரும் நிலையில் மூத்த குடிமக்களின் நலனை பாதுகாத்திட இது செய்யப்பட்டுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
முதலாவதாக மூத்த குடிமக்களுக்காக ’SBI We Care’ என்று எஸ்பிஐ ஒரு நிரந்தர வைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதை தொடர்ந்து ஹெச்டிஎப்சி வங்கி ’ HDFC Senior Citizen Care FD’ என்றும், ஐசிஐசிஐ வங்கி ‘ICICI Bank Golden Years’ என்றும் சிறப்பு திட்டங்களை தொடங்கின.
Advertisment
Advertisements
எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் மூத்த குடிமக்கள் சிறப்பு நிரந்தர வைப்பு நிதி திட்டத்தின் சில பொதுவான அம்சங்கள்:
1) மூத்த குடிமக்கள் சிறப்பு நிரந்தர வைப்பு நிதி திட்டம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு பொருந்தும்.
2) புதிய வட்டி விகிதங்கள் புதிய கால வைப்பு மற்றும் ஏற்கனவே உள்ள வைப்புகளுக்கு பொருந்தும்.
3) மூத்த குடிமக்கள் சிறப்பு நிரந்தர வைப்பு நிதி திட்டம் செப்டம்பர் 30, 2020 வரை பொருந்தும்.
4) எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை நிரந்தர வைப்புத்தொகைக்கு தற்போதுள்ள மூத்த குடிமக்களின் வட்டி விகிதங்களை விட கூடுதல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன
5) டெப்பாசிட் தொகை ரூபாய் 1.5 லட்சம் வரை வரையறுக்கப்படவில்லை.
6) 60 வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் மூத்த குடிமக்கள் சிறப்பு நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுடையவர்கள்.
எஸ்பிஐ மூத்த குடிமக்கள் சிறப்பு நிரந்தர வைப்பு நிதி திட்டம் - திட்டத்தின் பெயர்: SBI We Care
- 12 மே 2020 முதல் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க செய்துள்ளது.
- கால அளவு: 5 வருடங்கள்
- புதிய வட்டி: 80 bps அதிகமாக
- வட்டி விகிதம்: ஒரு மூத்த குடிமகன் மூத்த குடிமக்கள் சிறப்பு நிரந்தர வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஒரு புதிய நிரந்தர வைப்பை செய்தால் இதற்கு பொருந்தும் வட்டி விகிதம் 6.50 சதவிகிதம்
- முன்கூட்டியே திரும்ப பெறுதல்: முன்கூட்டியே திரும்பப் பெறும்போது 30 பிபிஎஸ் கூடுதல் பிரீமியம் செலுத்தப்படாது. 0.5% அபராதம் விதிக்கப்படலாம்
அதிகப்பட்ச டெப்பாசிட் தொகை: ரூபாய் 2 கோடிக்கு குறைவாக.
ஹெச்டிஎப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிரந்தர வைப்பு திட்டம்
திட்டத்தின் பெயர்: HDFC Senior Citizen Care
ஹெச்டிஎப்சி வங்கி இதை 18 மே 2020 முதல் கிடைக்கச் செய்துள்ளது
கால அளவு : 5 வருடங்கள் 1 நாள் முதல் 10 வருடங்கள்
புதிய வட்டி : 75 bps அதிகமாக
வட்டிவிகிதம்: இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவிகிதம் வட்டி விகிதம் கொடுக்கப்படும். இந்த புதிய தயாரிப்பின் கீழ், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 25 பிபிஎஸ் பிரீமியம் செலுத்தப்படும்.
முன்கூட்டியே திரும்ப பெறுதல்: 5 ஆண்டுகளில் அல்லது அதற்கு முன்னர் திரும்பப் பெற்றால் 1% அபராதம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெற்றால் 1.25% அபராதம்.
அதிகப்பட்ச டெப்பாசிட் தொகை: ரூபாய் 5 கோடிக்கும் குறைவாக.
ஐசிஐசிஐ வங்கி சிறப்பு மூத்த குடிமக்களுக்கான நிரந்தர வைப்பு திட்டம்.திட்டத்தின் பெயர்: ICICI Bank Golden Years
ஐசிஐசிஐ வங்கி இதை 20 மே 2020 முதல் கிடைக்கசெய்துள்ளது.
கால அளவு: 5 வருடங்கள் 1 நாள் முதல் 10 வருடங்கள்
புதிய வட்டி : 80 bps அதிகமாக
வட்டி விகிதம்: இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 6.55 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
முன்கூட்டியே திரும்ப பெறுதல்: 5 ஆண்டுகள் ஒரு நாளுக்கு முன்பு திரும்பப் பெற்றால் 1% அபராதம்
5 ஆண்டுகள் ஒரு ஒரு நாளுக்கு பிறகு திரும்ப பெற்றால் 1.30 சதவிகிதம் அபராதம்.
அதிகப்பட்ச டெப்பாசிட் தொகை: ரூபாய் 2 கோடிக்கும் குறைவாக
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil