மத்திய அரசு ஏழைகளுக்கு வழங்கும் நிதியுதவி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வைரல் செய்திகள் வலம் வருகின்றன.
சில யூடியூப் சேனல்களால், உண்மையில் இல்லாத அரசாங்கத் திட்டத்தைப் பற்றி குறிப்பிடுகின்றன.
அரசாங்கத்தின் 'நாரி சக்தி யோஜனா' திட்டத்தின் கீழ், எஸ்பிஐ, நாட்டின் அனைத்துப் பெண்களுக்கும் உத்தரவாதமும் இன்றியும் வட்டியும் இன்றி ரூ.25 லட்சம் கடனை வழங்குகிறது என்று ஒரு போலிச் செய்தி கூறுகிறது.
இது குறித்து பிஐபி விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், சில யூடியூப் சேனல்கள் பல்வேறு அரசுத் திட்டங்கள் தொடர்பான விவரங்களை வழங்குகின்றன.
அவை உண்மையில் இல்லை. இவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். மோசடி செய்பவர்களால் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பரப்பப்படும் இந்தச் செய்திகளால் ஏமாற்றம் அடைய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், வைரஸ் செய்தியாக அனுப்பப்படும் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை மக்கள் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் PIB அவ்வப்போது எச்சரிக்கை விடுத்துவருகிறது.
மேலும், இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் கிடைத்தால், அதன் நம்பகத்தன்மையை நீங்கள் எப்போதும் அறிந்து கொள்ளலாம்.
அது உண்மையான செய்தியா அல்லது பொய்யான செய்தியா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு செய்தியை அனுப்ப வேண்டும்.
மாற்றாக நீங்கள் உண்மைச் சரிபார்ப்புக்கு +918799711259 என்ற எண்ணுக்கு WhatsAppஇல் சம்பந்தப்பட்ட செய்தியை அனுப்பலாம். உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்புத் தகவலும் https://pib.gov.in இல் கிடைக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“