Advertisment

எஸ்பிஐ அப்டேட் - 999.9 அளவு தரம் வாய்ந்த தங்கத்தை வைப்பு வைக்க திட்டம் இருக்கா? இதைப் படிங்க

தங்க வைப்பு திட்டத்தின் விதிகளின்படி, துண்டுகளான தங்கம் தான் கண்டிப்பாக வைப்பு வைக்க முடியும். எனவே தங்களிடம் வைக்கப்பட்ட தங்கத்தின் தரத்தை அறிய, அதை உருக்கி பரிசோதிக்க பரிசோதனைக் கூடத்துக்கு வங்கி அனுப்பியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எஸ்பிஐ அப்டேட் - 999.9 அளவு தரம் வாய்ந்த தங்கத்தை வைப்பு வைக்க திட்டம் இருக்கா? இதைப் படிங்க

எஸ்பிஐ யின் தங்க வைப்புத் திட்டம். 999.9 தரத்திலான தங்கத்தை வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால் 999 அல்லது 995 அளவு தரம்வாய்ந்த தங்கத்தை தான் வைப்பு காலம் முடிந்து வங்கி உங்களுக்கு திருப்பி தரும்.

Advertisment

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணைய (National Consumer Disputes Redressal Commission) தீர்பின்படி, பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தங்க வைப்புத் திட்டத்தில் (SBI Gold Deposit Scheme) நீங்கள் 999.9 அளவு தரம்வாய்ந்த தங்கத்தை வைப்பு வைத்தாலும், வங்கி 999 அல்லது 995 அளவு தரம்வாய்ந்த தங்கத்தை தான் திரும்பத் தரும்.

எஸ்பிஐ EMV டெபிட் கார்டை ஆன்லைனில் எப்படி வாங்குவது?

ஒரு வாடிக்கையாளர் இந்தியன் வங்கியில் இருந்து 999.9 அளவு தரம்வாய்ந்த இரண்டு தங்க கட்டிகளை ஒவொன்றும் 500 கிராம் எடையுள்ளதாக வாங்கி எஸ்பிஐ வங்கியின் தங்க வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளார். இந்த திட்டத்தின் விதிகளின் படி வங்கி அந்த தங்க கட்டிகளின் தரத்தை உருக்கி பரிசோதிக்க இந்திய அரசின் (India Government Mint) தங்க பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த தங்க கட்டிகளின் சுத்த தன்மை 999.9 என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தங்கத்தை உருக்கி அதன் தரத்தை கண்டுபிடிக்கும் செயல்முறையின் போது 0.04 சதவிகிதம் இழப்பு ஏற்பட்டது.

995 அளவு சுத்தமான தங்கத்தின் எடை ஒரு கட்டி 502.161 என்ற அளவிலும் மற்றொரு கட்டியின் எடை 501.809 என்ற அளவிலும் இருக்கும் என்று இந்திய அரசு பரிசோதனைகூடம் சான்று அழித்தது. அதே போல் 999.0 அளவு சுத்தமான தங்கத்தின் எடை ஒரு கட்டி 500.150 கிராம் என்ற அளவில் இருக்கும் என்றும் மற்றொன்று 499.800 என்ற அளவில் இருக்கும் என்றும் சான்று அழித்தது.

இந்த சான்றின் அடிப்படையில் எஸ்பிஐ வங்கி தங்க கட்டிகளின் எடை மற்றும் தரத்தை குறிப்பிட்டு வாடிக்கையாளருக்கு தங்க வைப்புத் திட்டத்தின்படி சான்று அனுப்பியது. ஒரு தங்க கட்டியின் எடை 499.8 என்றும் இன்னொரு கட்டியின் எடை 500.150 என்றும் அதன் சுத்த தன்மை 999 என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அந்த வாடிக்கையாளர் வங்கி கொடுத்த எடை சான்றை ஏற்க மறுத்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி தனக்கு நிவாரணம் கோரினார். நுகர்வோர் நீதிமன்றம் அந்த வாடிக்கையாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. வங்கி சேவை குறைபாட்டில் ஈடுப்பட்டதாகவும், நியாயமற்ற வர்த்தகம் புரிந்ததாகவும் சுட்டிகாட்டியது.

வாடிக்கையாளர் வங்கியின் தங்க வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் போது கொடுக்கும் தங்கத்தின் தரம் மற்றும் எடை ஆகியவை அந்த திட்டத்தின் கால அளவு முடிந்த பின்னர், வங்கி வாடிக்கையாளருக்கு திருப்பி கொடுக்கும் போதும் அதே தரத்துடனும் எடையுடனும் இருக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

1000க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஏலம் : மிகப்பெரிய ஏல நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கிறது எஸ்பிஐ

இதை தொடர்ந்து வங்கி மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால் மாநில ஆணையம் அதை தள்ளுபடி செய்ததால் இறுதியாக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடியது.

தங்க வைப்பு திட்டத்தின் விதிகளின்படி, துண்டுகளான தங்கம் தான் கண்டிப்பாக வைப்பு வைக்க முடியும். எனவே தங்களிடம் வைக்கப்பட்ட தங்கத்தின் தரத்தை அறிய, அதை உருக்கி பரிசோதிக்க பரிசோதனைக் கூடத்துக்கு வங்கி அனுப்பியுள்ளது.

இந்த திட்டத்தில் தங்கத்தை வைப்பு வைக்கும் போது வாடிக்கையாளர் வங்கி சொன்ன அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு தான் வைப்பு வைத்தார். எனவே வங்கி அதன் தரம் மற்றும் எடையை அறிய உருக்கி பரிசோதனை செய்ய அனுப்பியதை அவரால் குறைகூற முடியாது. மேலும் தங்கத்தை உருக்காமல் அதன் தரத்தை பரிசோதிக்க முடியாது. எனவே உருக்கும் பொது ஏற்படும் இழப்பை வாடிக்கையாளர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும், அதை வங்கி ஏற்றுக் கொள்ள முடியாது என தனது தீர்பில் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment