இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (State Bank of India) நகைக் கடன்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச ஆவண வேலை மற்றும் குறைந்த வட்டி விகிதத்துடன் வங்கிகளால் விற்கப்படும் தங்க நாணயங்கள் உட்பட தங்க ஆபரணங்களை அடமானம் வைத்து எஸ்பிஐ வங்கியில் நகை கடன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ நகைக் கடன் சலுகைகள்
- எஸ்பிஐ YONO ஆப் மூலம் நகைக் கடனுக்கு விண்ணப்பித்தால் பிராசஸிங் கட்டணம் (Processing fee) முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
- நகைக் கடன் வட்டியை பொறுத்தவரை ஆண்டுக்கு 7.30% முதல் தொடங்குகிறது.
- கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலம் புல்லட்/ஓவர் டிராஃப்ட்/இஎம்ஐ என பல விருப்பங்களுடன் 36 மாதம் வரை வழங்கப்படுகிறது.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தொகை
அதிகபட்ச கடன் தொகை ரூ 50 லட்சம் மற்றும் குறைந்தபட்ச கடன் தொகை ரூ 20,000 என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
1) தங்கக் கடன்: 25 சதவீதம்
2) திரவ தங்க கடன்: 25 சதவீதம்
3) புல்லட் திருப்பிச் செலுத்தும் தங்கக் கடன்: 35 சதவீதம்
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடனுக்குத் தகுதியானவர்கள் ஆவர். வங்கியின் ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் உட்பட நிலையான வருமானம் கொண்ட எந்தவொரு தனிநபரும் (தனியாகவோ அல்லது கூட்டாகவோ) கடனுக்குத் தகுதியுடையவர்கள் ஆகும்.
தேவையான ஆவணங்கள்
- நகைக் கடன் விண்ணப்பம்
- இரண்டு போட்டோ
- அடையாள அட்டை
- முகவரிச் சான்று
- கல்வியறிவற்ற விண்ணப்பதாரராக இருந்தால் சாட்சிக் கடிதம்
ஏதேனும் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால், தொடர்பு மையத்திலிருந்து அழைப்பைப் பெற 7208933143 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் அல்லது 7208933145 என்ற எண்ணிற்கு “GOLD” என SMS அனுப்ப வேண்டும்.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தங்க நகை கடன் குறித்து கூடுதல் தககவல்களை பார்வையிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil