scorecardresearch

ரூ.2 ஆயிரம் தாள்களை டெபாசிட் செய்ய தனி கவுன்ட்டர் அமைத்த எஸ்.பி.ஐ

ரூ.2 ஆயிரம் தாள்களை மாற்ற புதுச்சேரி எஸ்பிஐ வங்கியில் தனி கவுன்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

SBI has set up a separate counter for depositing Rs2000 notes
புதுச்சேரி எஸ்பிஐ வங்கியில் தனி கவுன்ட்டர் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது. ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது.
இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23ஆம் தேதி (இன்று) முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம்.

இல்லையெனில், வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம் எனத் அறிவித்தது.
அதனடிப்படையில் இன்று புதுச்சேரி உள்ள அனைத்து வங்கிகளிலும் 2000 ரூபாய் மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒரு சில வங்கி கிளைகளில் சிறப்பு கவுன்ட்டர்களில் ஆதார், பான்கார்டு போன்ற ஏதாவது ஆவண விவரங்களுடன், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு சில வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்ட உள்ளது. குறிப்பாக ஸ்ப்ரேன் வீதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் தனி கவுண்டர் அமைக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் நாள் என்பதால் 2000 ரூபாய் மாற்றுபவர்கள் ஒரு சிலரே வந்ததாகவும் தனியாக கவுண்டர் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று நகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் 2000 ரூபாய் மாற்றிக்கொள்ள கவுண்டர்கள் அமைக்கப்பட்டும் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi has set up a separate counter for depositing rs2000 notes

Best of Express