SBI HDFC bank accounts for minors schemes and banking facilities : குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொள்வது வழக்கம். அதில் மிக முக்கியமான ஒன்று குழந்தைகளின் வருங்காலத்திற்காக பணம் சேமிப்பது அதில் மிக முக்கியமான ஒன்றாகும். கமர்சியல் பேங்குகள் மட்டுமல்லாமல் அனைத்து நிதி நிறுவனங்களும் குழந்தைகளுக்காக சிறந்த வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. எஸ்.பி.ஐ மற்றும் எச்.டி.எஃப்.சி நிறுவனம் மைனர்களுக்கு வழங்கும் வங்கி சேவைகள் குறித்து ஒரு பார்வை.
SBI savings account for minors
குழந்தைகளுக்காக எஸ்.பி.ஐ இரண்டு முக்கியமான சேவைகளை வழங்கி வருகிறது. ஒன்று பெஹ்லா கதம் மற்றொன்று பெஹலி உடான். இந்த இரண்டு கணக்குகளுக்கும் இண்டெர்நெட் பேக்கிங் மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகிறது எஸ்.பி.ஐ. இந்த இரண்டு கணக்குகளிலும் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை சேமித்து வைக்க இயலும். நாமினிகளை நியமித்துக் கொள்ள இயலும். மேலும் இதர மைனர் அக்கௌண்ட்டுகளுக்கு பணப் பரிமாற்றம் செய்ய கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் நாள் ஒன்றுக்கு ரூ. 2000 வரையில் இணைய பரிவர்த்தனையில் பயன்படுத்திக் கொள்லலாம். அதே போன்று குழந்தையின் உருவம் பொறித்த ஏ.டி.எம் கார்ட்கள் மூலமாக ரூ. 5 ஆயிரம் வரையில் பணம் எடுத்துக் கொள்ள இயலும்.
மேலும் படிக்க : வட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது
HDFC Bank savings account for minors
18 வயது நிரம்பாத அனைவருக்கும் எச்.டி.எஃப்.சி வங்கி குழந்தைகளுக்கான வங்கி சேவையை வழங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 2500 வரை ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க இயலும். அதே போன்று ரூ. 10 ஆயிரம் வரை பி.ஒ.எஸ் மற்றும் இணைய பரிவர்த்தனையில் பயன்படுத்திக் கொள்ள இயலும். நெட் பேங்கிங், போன் பேங்கிங், மொபைல் பேங்கிங், இலவச ஆர்.டி.ஜி.எஸ் மற்றும் என்.ஈ.எஃப்.டி, ஃப்ரீ பில் பேமெண்ட், பே-ஸாப், சில்லார் ஆகிய சேவைகளை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது எச்.டி.எஃப்.சி வங்கி. வங்கிக் கணக்கினை வைத்திருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சாலை அல்லது விமான விபத்துகளில் உயிரிழந்தால் ரூ. 1 லட்சம் வரை கல்விக்கான காப்பீட்டினை வழங்குகிறது எச்.டி.எஃப்.சி நிறுவனம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.