கொரோனா காலத்தை கருத்தில்கொண்டு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான பிக்ஸட் டெபாசிட் ஸ்கீம்களை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் FD திட்டங்களில் கூடுதல் 50அடிப்படை புள்ளிகள்(Basic points) நன்மைகளை அளிக்கிறது.
முன்னதாக 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 2021 மார்ச் 31 வரை இந்த சலுகையினை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா இரண்டாவது அலையால் ஜூன் 30 வரை இந்த சலுகை நீட்டிக்கப்பட்டது. தற்போது SBI, HDFC, ICICI, Bank of Baroda போன்ற வங்கிகள் ஐந்தாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கான சிறப்பு FD ஸ்கீம்களை வழங்குகின்றன.
சீனியர் சிட்டிசன்களுக்கான இந்த சிறப்பு FD ஸ்கீம்கள் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
எஸ்பிஐ விகேர் டெபாசிட்
எஸ்பிஐயின் இந்த ஸ்பெஷல் எஃப்.டி திட்டம் ‘விகேர் டெபாசிட்’ என அழைக்கப்படுகிறது. இது 30 அடிப்படை புள்ளிகளின் கூடுதல் பிரீமியத்தை வழங்குகிறது. அதாவது 80 அடிப்படை புள்ளிகளில் கிடைக்கும். சாதாரணமாக எஸ்பிஐ பிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு 5.4% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை புதிய FD கணக்கு மற்றும் முதிர்ச்சியடைந்த வைப்புகளை புதுப்பித்தல் ஆகிய இரண்டிலும் பெறலாம். ஆனால் வீகேர், திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கோ 6.20% வட்டி வழங்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்
HDFC சிறப்பு FD திட்டம்
எச்.டி.எஃப்.சி வங்கியின் சிறப்பு எஃப்.டி திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் 0.75 சதவீத கூடுதல் வட்டியை பெறுவார்கள். ஆனால், இந்த சலுகை 5 முதல் 10 ஆண்டு காலத்திற்கு 5 கோடிக்குள் ஒரு நிலையான வைப்புத்தொகையை எதிர்பார்க்கும் 60 முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மூத்த குடிமக்கள் பராமரிப்பு எஃப்.டி திட்டத்தில் வங்கி 6.25 சதவீத வட்டியை செலுத்தும். எச்.டி.எஃப்.சி வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தின்படி, இந்த விகிதங்கள் கடந்த ஆண்டு மே 21 முதல் அமலில் இருக்கிறது.
ICICI சிறப்பு FD திட்டம்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் எஃப்.டி திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு 0.30% கூடுதல் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த விகிதம் ஆண்டுக்கு 0.50 சதவீத கூடுதல் விகிதத்திற்கு மேல் சேர்க்கப்படுகிறது. ரூ. 2 கோடிக்கும் குறைவான ஒற்றை எஃப்.டி.களில் 5-10 ஆண்டுகள் டெபாசிட் செய்ய இந்த திட்டம் பொருந்தும். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இந்த கோல்டன் இயர்ஸ் எஃப்.டி திட்டம் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட வைப்புத்தொகைகளுக்கு வழங்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் 6.30 சதவீத வீதத்தை வழங்குகிறது. இது 2020 அக்டோபர் 21ம் தேதி முதல் நடைமுறையில் இருக்கிறது.
பேங்க் ஆப் பரோடா
இந்த FDகளில் மூத்த குடிமக்களுக்கு 100 bps (அடிப்படை புள்ளிகள்) பாங்க் ஆப் பரோடா வழங்குகிறது. சிறப்பு எஃப்.டி திட்டத்தின் கீழ், சீனியர் சிட்டிசன் 5 வருடங்கள் மேல் 10 வருடங்கள் வரை 1% tenor பெறுவர். இத்திட்டத்தைப் பெறும் நபர்கள் இந்த வைப்புகளில் 6.25 சதவீதம் பெறுவார்கள். இந்த ஸ்பெஷல் திட்டம் நவம்பர் 16ஆம் தேதி முதல் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"