எஸ்.பி.ஐ வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான கார் லோன், கார் பைக் போன்று வாகனங்கள் வாங்கும் போது, வாகன கடன் பெறுவதும் உண்டு. கார் லோன் எடுக்கும் போது உங்களது சிபில் ஸ்கோரைப் பொருத்து வட்டி விகிதம் மாறுபடலாம்.
இந்த வட்டி விகிதம் எந்த மாதிரியான கார், என்பதைப் பொருத்து மாறுபடும். இந்த திட்டத்தின் கீழ் வாகன கடன் வாங்கும் போது விண்ணப்பத்துடன் வருமான சான்றிதழ், கடைசி மூன்று மாத சம்பள பட்டியல், வருமான வரி ஒப்புதல் சீட்டு, அடையாள மற்றும் முகவரி சான்றிதழ் போன்றவற்றை பான் கார்டுடன் சமர்ப்பித்தல் வேண்டும். அதிக சலுகையுடன் ‘வாகன கடன்’ வழங்கும் வங்கிகள் பற்றி இங்குப் பார்ப்போம்.
எச்டிஎஃப்சி
எச்டிஎஃப்சி வங்கி கார் லோனில் லட்சத்திற்கு மாதாந்திர தவணையை தொகை 2,093 முதல் 2,314 ரூபாய் பொருத்து வட்டி விகிதத்தை 9.35 சதவீதம் 13.75 வரையில் அமைத்துள்ளது.
மேலும் 2,825 முதல் 5,150 ரூபாய் வரை லோன் செயல்பாட்டு கட்டணமாக செலுத்த வேண்டும். எச்டிஎஃப்சி வங்கி உங்கள் லோன் தகுதியை ஒரு நிமிடத்தில் சரிபார்த்து 30 நிமிடத்தில் துரிதமாக கடனை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ வங்கி
கார் லோனில் லட்சத்திற்கு மாதாந்திர தவணை தொகை 2,093 முதல் 2,365 ரூபாய் பொருத்து வட்டி விகிதத்தை 9.35 சதவீதம் 13.75 வரையில் ஐசிஐசிஐ வங்கி அமைத்துள்ளது.
2,500 முதல் 5,000 ரூபாய் வரை செயல்பாட்டு கட்டணம் எச்டிஎஃப்சி வங்கியைப் போன்று ஐசிஐசிஐ வங்கியிலும் செலுத்த வேண்டும். மேலும் ஐசிஐசிஐ வங்கி புதிய கார்களுக்கு 100 சதவீத விலையையும் 7 வருட தவணையாகவும், பழைய கார்களுக்கு 80 சதவீத விலை வரை 5 வருடத்திற்கும் கடனாக அளிக்கிறது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
ஒவ்வொரு மாதமும் லட்சத்திற்கு 2,108 முதல் 2,280 ரூபாய் வரை தவணையாக செலுத்த வேண்டியதைப் பொருத்து கார் லோன் திட்டங்களில் வட்டி விகிதம் 9.65% முதல் 13.10 சதவீதம் வரை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அளிக்கிறது. இதில் பதிவு, காப்பீடு மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி உபரிசாதனங்கள் / வருடாந்தர பராமரிப்பு ஒப்பந்தம் சாலை விலை என அனைத்தையும் கடனாக பெறலாம்.
மேலும் படிக்க : இந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்