Home loans offer interest rates 2023 | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் தீபாவளி கால பண்டிகை சலுகைகளை அறிவித்துள்ளன. இதன்படி, வீட்டுக் கடன் வட்டி விகிதங்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் தள்ளுபடி ஆகியவை உள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடன் வட்டி விகிதங்களில் 65 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வரை தள்ளுபடியை வழங்குகிறது.
வழக்கமான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 9.15% முதல் தொடங்கும். இந்நிலையில் தற்போது, வங்கி வீட்டுக் கடன்களை ஆண்டுக்கு 8.4% வட்டி விகிதத்தில் வழங்குகிறது. மேலும், டாப்-அப் வீட்டுக் கடனிலும் நீங்கள் தள்ளுபடியைப் பெறலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியின் 'தீபாவளி தமாகா 2023' திருவிழா சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் 8.4% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் செயலாக்க கட்டணங்கள் கிடையாது. இந்தச் சலுகைகள் நவம்பர் 30, 2023 வரை கிடைக்கும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 9.15% முதல் தொடங்குகின்றன. இந்த நிலையில் தற்போத பண்டிகை கால சலுகையாக ஆண்டுக்கு 8.35% வட்டி விகிதத்தில் வழங்குகின்றன. மேலும், செயலாக்கக் கட்டணத்தில் 50% வரை தள்ளுபடி பெறலாம். வீட்டுக் கடன்களுக்கான இந்த தள்ளுபடிகள் டிசம்பர் 31, 2023 வரை கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“