Advertisment

SBI: வாடகைப் பணத்தை கிரெடிட் கார்டில் கட்டுறீங்களா? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத் தான்!

If you are using SBI credit card, the rate hike has been implemented for you | நீங்கள் SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களுக்காக கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fixed Deposit Interest Rate SBI Calculator

SBI hiked prices on rent payments | SBI credit card holder Tamil News: கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கான விலையை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உயர்த்தியுள்ளது. பரிவர்த்தனைகள் மூலம் வணிகர்கள் மீதான செயலாக்கக் கட்டணத்தையும் வங்கி அதிகரிக்கும் என்றும, இந்த புதிய கொள்கை நவம்பர் 15, 2022 முதல் அமலுக்கு வருகிறது என்றும், இந்தச் செய்தியை அதன் வாடிக்கையாளர்களுடன் எஸ்எம்எஸ் (SMS) மூலம் பகிரந்துள்ளது.

Advertisment

வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட எஸ்எம்எஸ் படி, “அன்புள்ள அட்டைதாரரே, உங்கள் கிரெடிட் கார்டில் உள்ள கட்டணங்கள் நவம்பர் 15-22 முதல் திருத்தப்படும்/ விதிக்கப்படும். மேலும் தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வணிகர் EMI பரிவர்த்தனைகளுக்கான செயலாக்கக் கட்டணம் ரூ. 199 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது + முந்தைய ரூ. 99 லிருந்து பொருந்தக்கூடிய வரிகள் + பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கான செயலாக்கக் கட்டணம் ரூ. 99 + பொருந்தக்கூடிய வரிகள்.”என்று தெரிவித்துள்ளது.

முன்பு ரூ.99 ஆக இருந்த கட்டணத்தையும் வங்கி தற்போது உயர்த்தியுள்ளது. இப்போது, ​​வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.199 வசூலிக்கும். கூடுதலாக, அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டியும் விதிக்கப்படும். நவம்பர் 15, 2022க்கு முன் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் வாடகைப் பணங்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் பொறுப்பாகாது.

publive-image

இந்த நடவடிக்கையை எடுத்த இரண்டாவது வங்கியாக எஸ்பிஐ மாறியுள்ளது. முன்னதாக, ஐசிஐசிஐ வங்கி அதன் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களிடமிருந்து வாடகையில் 1% செயலாக்கக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவித்தது. வங்கி இந்த நடவடிக்கையை அக்டோபர் 20, 2022 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.

அட்டை வழங்குநர்கள் அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளனர். முன்னதாக, ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் ரிவார்டு புள்ளிகளையும் மட்டுப்படுத்தியது. மேலும், இது தொடர்பான பரிவர்த்தனைகளை மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே செய்ய யெஸ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Cred, Paytm, RedGiraffe, Mygate மற்றும் Magicbricks போன்ற மூன்றாம் தரப்பு பயனர்களும் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டுகள் மூலம் வாடகை செலுத்துவதற்கான விருப்பங்களை வழங்குகிறார்கள். ஆனால் மாற்றாக, அவர்கள் தங்கள் வாடகைக் கொடுப்பனவுகளில் சில கட்டணங்களையும் விதிக்கிறார்கள். சுருக்கமாக, கிரெடிட் கார்டுகள் மூலம் வாடகை செலுத்துவதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவைக் கட்டணத்தை வசூலிக்கின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Business Business Update 2 Tamil Business Update Sbi Sbi Bank Update Sbi Bank Sbi Banking Sbi Bank Alert
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment