இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (State Bank of India), தனது வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Advertisment
புதிய அறிக்கையின்படி, 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கும், தொடர் வைப்பு நிதி(Recurring Deposit) திட்டங்களின் வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளது. முன்னதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஷார்ட் டெர்ம் FDகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஸ்டேட் வங்கியின் (State Bank of India) கூற்றுப்படி, எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்கள் 7 நாட்களில் இருந்து 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. SBI இந்த விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.10% அதிகரித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 22 சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வட்டி அதிகரிப்பு அறிவிப்பானது, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ, கனரா வங்கிகள் அறிவிப்புகள் மத்தியில் வந்துள்ளது. அண்மை காலமாக, அனைத்து வங்கிகளும் வட்டியை அதிகரிக்கும் பணியில் களமிறங்கியுள்ளன.
புதிய வட்டி விகிதங்கள் விவரங்கள்
பிக்சட் டெபாசிட் காலம்
சாதாரண மக்கள்
மூத்த குடிமக்கள்
1 ஆண்டு முதல் 2 ஆண்டு வரை
5.10
5.60
2 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை
5.10
5.60
3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை
5.30
5.80
5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை
5.40
6.20
ரெக்கரிங் டெபாசிட்
எஸ்பிஐ ரெக்கரிங் டெபாசிட் வட்டி விகிதங்கள் சாதாரண மக்கள் 5.1 சதவீதம் முதல் 5.4ஆக உள்ளது. தற்போது, ரெக்கரிங் டெபாசிட்டின் மூத்த குடிமக்களின் வட்டி விகிதம் கூடுதலாக 50 பேசிஸ் பாயிண்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஜனவரி 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. எஸ்பிஐ ஆர்டி கணக்குகளில், மாதந்தோறும் குறைந்தப்பட்சம் 100 ரூபாய் செலுத்திருக்க வேண்டும். அதிகப்பட்ச தொகைக்கு வரம்பு இல்லை.
வட்டி விகிதம்
1 ஆண்டு முதல் 2 ஆண்டு வரை - 5.1 சதவீதம்
2 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை - 5.1 சதவீதம்
3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை - 5.3 சதவீதம்
5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை - 5.4 சதவீதம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil