நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வீதங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் எஸ்பிஐ ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி வீதத்தை எஸ்பிஐ 20பிபிஎஸ் வரை உயர்த்தியுள்ளது.
இந்த புதிய வட்டி வீதங்கள் அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
எஸ்பிஐ வட்டி வீதங்கள்
அந்த வகையில் தற்போது 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான முதிர்வு கால அளவுள்ள நிலையான-விகித டெபாசிட்டுகளுக்கான (FDகள்) வட்டி விகிதங்களை பொது மக்களுக்கு 3% முதல் மூத்த நபர்களுக்கு 3.5% வரை வங்கி உயர்த்தியுள்ளது.
தொடர்ந்து, 46 முதல் 179 நாட்கள் முதிர்வு காலத்துடன் கூடிய FDகள் இப்போது பொது மக்களுக்கு 4 % மற்றும் மூத்த நபர்களுக்கு 4.50 % வட்டியும் வழங்கும். மேலும் பொது மக்களுக்கு, மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான கால முதிர்வு உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.60% லிருந்து 5.80% ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 6.10% லிருந்து 6.30% ஆகவும் அதிகரித்துள்ளது.
ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட முதிர்வு கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொது மக்களுக்கு 5.65 சதவீதத்தில் இருந்து 5.85 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு 6.45 சதவீதத்தில் இருந்து 6.65 சதவீதமாகவும் வங்கி உயர்த்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil