SBI Holiday Savings Account : எங்காவது டூர் செல்ல வேண்டுமா? தொலை தூரமாக, வெளிநாடுகளுக்கு, இதற்கு முன் பார்த்திராத ஒரு நாட்டிற்கு. அதற்காக தான் கொண்டு வரப்பட்டுள்ளது எஸ்.பி.ஐயின் ஹாலிடே சேவிங்ஸ் அக்கௌண்ட். 12 மாதங்களில் முதிர்வாகும் இந்த அக்கௌண்ட்டின் 13வது தவணையை தாமஸ் குக் நிறுவனம் கட்டும்.
இதற்கு தாமஸ் குக் நிறுவனத்தின் மூலமாகவே இந்த அக்கௌண்ண்டை நீங்கள் பெற முடியும். மாதாந்திர சேமிப்புத் தொகையாக சிறிய அளவு பணத்தினை நீங்கள் இந்த கணக்கில் கட்டிக் கொண்டே வர வேண்டும்.
SBI Holiday Savings Account எப்படி வேலை செய்கிறது ?
நீங்கள் www.thomascook.in/holidays/holiday-savings-account/state-bank-of-india என்ற லிங்கை க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
அதில் உங்களுக்கு விருப்பமான பேக்கேஜை தேர்வு செய்து கொள்ளவும்
ஒவ்வொரு சுற்றுலா தளத்திற்கும் மாதாந்திர தவணை என பட்டியிலிட்டு உள்ளனர். அதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து நீங்கள் மாதம் மாதம் பணம் செலுத்தினால் போதும்.
12 மாதங்கள் முடிவுற்ற பின்பு, உங்களுடைய பணம் தாமஸ் குக் நிறுவனத்திற்கு சென்று விடும். அங்கு 13வது மாதத்தவணையை செலுத்திய பிறகு உங்களுக்கு பிடித்த ஊருக்கு நீங்கள் பயணம் செய்யலாம்.
நீங்கள் அடுத்த வருடம் வெளிநாடு/சுற்றுலா செல்ல இன்றிலிருந்தே சேமிக்கத் துவங்குவதால் உங்கள் செலவுகள் 20% வரை குறைக்கப்படும்.
வட்டிவிகிதம் 6.65%மாகும். மேலும் நீங்கள் சேமிக்கும் தொகைக்கு வரி பிடிமானம் ஒன்று.
இந்த ப்ரீமியமின் காலம் முடிவதற்குள் பணத்தை விரும்பினால் வாடிக்கையாளர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
தாமதமாக கட்டப்படும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் 1.50 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : சுற்றுலா செல்ல வேண்டுமா ? உங்களுக்கு தேவையான ஆப்கள் இதோ !