எஸ்பிஐ வங்கி, MCLR (Marginal Cost of fund based lending rate) வட்டிவிகிதம் தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.
அது விடுத்துள்ள அறிவித்தலில் வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்து 8.40 சதவீதமாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ வங்கியின் இந்த
வட்டி விகித குறைப்பால் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்கள் குறையும். இந்த ஆண்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தற்போது மூன்று முறை கடன் திட்டங்கள்
மீதான வட்டி விகிதத்தை இந்த வங்கி குறைத்துள்ளது. குறித்த வங்கி வீட்டுக் கடன் திட்டம் மீதான
வட்டி விகிதத்தை ஆபிஐ-ன் ரெப்போ வட்டி விகிதத்துடன் 2019 ஜூலை 1-ம் தேதி முதல்
இணைத்துள்ளது. இனி வரும் காலங்களில் இந்த வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கும்போது
அதன் தாக்கம் நேரடியாக எஸ்பிஐ கடன் திட்டங்களிலும் இருக்கும்.
எஸ்பிஐ வங்கிதான் தற்போது குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கும்
நிறுவனமாக உள்ளது. எஸ்பிஐ வங்கி, 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 8.60 சதவீதத்திலிருந்து 8.55 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இந்த வங்கியில் வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 8.55 சதவீதமாகவும், அதிகபட்சம் 9.45 சதவீதமாகவும் உள்ளது. இந்த புதிய வட்டி விகித குறைப்பு 2019 ஜூலை 10-ம் தேதி முதல் அமலுக்கு
வந்தது.