எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இது கொண்டாட்டமான நாள்.. பின்ன இப்படி ஒரு அறிவிப்புக்கு தானா இத்தனை நாள் வெய்டிங்!

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு இந்த தகவல்

indianbank net banking
indianbank net banking

SBI Home Loan Interest : எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளராக நீங்கள்.. இதோ இந்த முக்கியமான தகவல் உங்களுக்கு தான். எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்கள் இந்த தகவலை கேட்டு நிச்சயம் சந்தோஷத்தில் பறக்கலாம்.

எஸ்பிஐ வங்கி இன்று முதல் கடன் திட்டங்கள் மீதான MCLR வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் MCLR வட்டி விகிதம் 8.55 சதவீதமாக இருந்த நிலையில் அதை ஏப்ரல் 10-ம் தேதி முதல் 8.50 சதவீதமாகக் குறைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்து அறிவித்ததை அடுத்து எஸ்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

MCLR வட்டி விகித குறைப்பு மட்டுமில்லாமல் எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதம் ஏப்ரல் 10 முதல் 8.60 முதல் 8.90 சதவீதமாக இருக்கும். தற்போது இது 8.70 முதல் 9.00 சதவீதமாக உள்ளது.

மேலும் படிக்க..பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 8% மேல் வட்டி தரும் ஒரே தனியார் வங்கி இதுதான்!

2019 மே 1-ம் தேதி முதல் எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் உள்ள 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்புத் தொகை வைத்திருந்தால் வட்டி விகிதம் 3.50 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாகக் குறையும்.

ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்துடன் சேமிப்பு கணக்குகளையும் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைத்ததினால் இந்த வட்டி விகித குறைப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறைவதும், அதிகரிக்கும் போது வட்டி விகிதம் உயர்வதும் இயல்பானது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi home loan interest rates up to rs 30 lakh

Next Story
நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு லாபம்.. எஸ்பிஐ-யில் இருக்கு மிகச் சிறந்த திட்டம்!ITR Filing Last Date
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express