sbi home loan sbi personal loan state bank : வங்கியில் பெற்றுக்கொள்ளப்படும் வீட்டுக்கடன் மூலம் நாம் நினைக்கும் வீட்டை வாங்கி மாதம் மாதம் தவணை முறையில் சில குறிப்பிட்ட தொகையை இஎம்ஐ யாக செலுத்துவோம். இவ்வாறு செலுத்தப்படும் மாத தவணை குறைந்தது பத்து ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக முப்பது ஆண்டுகள் வரை நீட்டித்து, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாத தவணை தொகை செலுத்தப்படுகின்றது.
Advertisment
வங்கியால் நிர்ணயிக்கப்படும் காலப்பகுதியில், கடன் பெற்றவருக்கு எதாவது நேர்ந்தாலோ அல்லது மாத தவணை கட்ட முடியவில்லை என்றாலோ கடன் மறு சீரமைப்பு மூலம், கடனை கட்ட கால அவகாசம் வழங்கப்படும் அல்லது மாற்று முறைக்கு வழி வகுக்கிறது.
கொரோனா காலத்தில் இது அப்படியே தலைக்கீழ் ஆனது. மக்களின் பொருளாதாரம் மந்திய நிலையில் எஸ்பிஐ உட்பட பல வங்கிகளில் இஎமை தளர்வுகள் 3 மாதத்திற்கு கடைப்பிடிக்கப்பட்டன. தற்போது அந்த தளர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது எஸ்பிஐ. என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.
sbi home loan sbi personal loan state bank : பார்ப்போம் வாருங்கள்.!
Advertisment
Advertisements
வீட்டுக் கடன், வாகன கடன் உள்ளிட்ட சில்லறை கடன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை, 2 ஆண்டுகள் வரை நீட்டத்துக்கொள்ளாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.எஸ்பிஐ வங்கியின் இந்த கடன் மறு சீரமைப்பு திட்டத்தைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முதலில், எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் சம்மந்தப்பட்ட வங்கி கிளையை அணுகி தவணை கால அவகாசத்தை நீட்டித்துக்கொள்ளலாம்.
எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகன உள்ளிட்ட பல்வேறு சில்லறை கடன்களைப் பெற்று இருந்து, கோவிட்-19 ஊரடங்கால் அதை செலுத்த முடியாமல் போயிருந்தால், அதைத் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 2 ஆண்டுகள் வரை நீட்டித்து வழங்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.
2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதிக்குள், எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்று அதற்கான தவணையை தவறாமல் ஒவ்வொரு மாதமும் கட்டி வந்து இருந்தால், எஸ்பிஐ வங்கி இந்த கடன் தவணையைத் தவறாமல் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்து வழங்கும்.
இந்த 2 ஆண்டு கடன் மறூசீரமிப்பு நீட்டிப்பு திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், வாடிக்கையாளரின் கடன் திட்டத்தின் மீது 0.35 சதவீதம் கூடுதல் வட்டி விகிதம் விதிக்கப்படும்.
எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கிகளும் கடன் மறுசீரமைப்பு அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் உள்ளது. எஸ்பிஐ வீட்டுக் கடன்களுக்கு 7 முதல் 7.35% வட்டி விதிக்கப்படுகிறது. அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
இதுமட்டுமல்லாமல், எஸ்பிஐ யோனோ ஆப் (Yono) ஆப் மூலம் கடனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கூடுதலாக 0.5% வட்டி சலுகை கிடைக்கும். புதிய வட்டி முறைக்கு மாறுவதற்கு ஒரு முறை மாற்றுக் கட்டணத்துடன் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தினால் போதுமானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil