SBI Home Loans Benchmark Interest Rate Cut : ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கான வட்டியை குறைத்து அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி. திங்கள் கிழமை (30/12/2019) அன்று தற்போது வழங்கி வரும் ஈ.பி.ஆர்-ல் (external benchmark-based rate (EBR)) இருந்து 25 புள்ளிகளை குறைத்து அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் 08.05% வட்டி வகிதம் 07.80%மாக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டில் தமிழ் திரையுலகம் இழந்த முக்கிய நட்சத்திரங்கள் யார் யார்?
ஏற்கனவே external benchmark-based rate (EBR) மூலமாக வீட்டுக்கடன்களை வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் துவக்கத்தில் மார்ஜினல் காஸ்ட் ஆஃப் பண்ட்ஸ் பேஸ்ட் லெண்டிங் ரேட்டையும் (Marginal Cost of Funds-based Lending Rate (MCLR)) 10 பேஸிஸ் புள்ளிகள் குறைத்து அறிவித்தது. ஈ.பி.ஆர் ரெப்பொ ரேட்டின் அடிப்படையில் அமையும் ஆனால் எம்.சி.எல்.ஆர் வங்கி நிதியை தொடர்புடையது. எஸ்.பி.ஐ வங்கியோடு, தற்போது இந்தியன் பேங்கின் எம்.சி.எல்.ஆர் கட்டண குறைப்பு ஜனவரி மூன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. தற்போது நிலவி வரும் எம்.சி.எல்.ஆர் 7.95 ஆகும். மாற்றப்பட்ட கட்டணம் 7.90.
ஆர்.பி.ஐ சில குறிப்பிட்ட வங்கிக் கடன்களை எக்ஸ்டெர்னெல் பெஞ்ச்மார்கினை அடிப்படையாக கொண்ட வட்டி விகிதத்துடன் இணைக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தான் ஜூலை 1ம் தேதி முதல் ஃப்ளோட்டிங் ரேட் ஹோம் லோன்களை அறிமுகம் செய்திருந்த போதும், எம்.எஸ்.எம்.ஈ, ஹவுஸிங் லோன், ரீட்டைல் லோன்கள் ஆகியவற்றை எக்ஸ்டெர்னெல் பெஞ்ச்மார்க்குடன் அக்டோபர் 1ம் தேதி எஸ்.பி.ஐ இணைத்தது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ வீதத்தைக் குறைப்பதை வங்கிகள் தாமதப்படுத்துகின்றன என்று அறிந்த பின்னர் தான் ரிசர்வ் வங்கி இம்முடிவுக்கு வந்தது. ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வீதமாகும்.
ஃபிப்ரவரி முதல் அக்டோபர் மாத காலத்தில் ஆர்.பி.ஐ ரெப்போ விகிதத்தை 135 புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த டிசம்பர் மாதத்தில் எவ்வித வட்டிக் குறைப்பையும் செய்யவில்லை ஆர்.பி.ஐ. பெரும்பாலான வங்கிகள் அவர்களின் கடன் விகிதத்தை ஆர்.பி.ஐயின் ரெப்போ விகிதத்தோடு இணைத்திருப்பதால், வருங்காலங்களில் வெளிப்புற பெஞ்ச்மார்க் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பரிமாற்றம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில், பண பரிமாற்றம் தேக்கமடைந்து முழுமையடையாமல் இருப்பதை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.