SBI home loans interest rates: இந்த நிதியாண்டில் நான்காவது முறையாக தங்களின் வாடிக்கையாளர்களுக்கான வீட்டுக்கடன் வட்டியை குறைத்துள்ளது எஸ்.பி.ஐ. வங்கி. இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்.பி.ஐயின் இந்த வட்டிக் குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
15 பேசிஸ் புள்ளிகள் அல்லது 0.15 புள்ளிகள் குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏப்ரல் 10ம் தேதி முதல் இன்று வரை தோராயமாக 35 பேசிஸ் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி.ஐ வங்கியின் இந்த மாற்றத்தை தொடர்ந்து பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி, அலகாபாத் வங்கி, மற்றும் ஐ.டி.பி.ஐ வங்கிகள் மாற்றங்களாஇக் கொண்டு வந்துள்ளன.
SBI home loans interest rates
நீங்கள் வாங்கியுள்ள வீட்டுக்கடன்களை பொறுத்து எவ்வளவு வரை வட்டி குறைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எளிமையாக அறிந்துகொள்ளும் வகையில் கீழே பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் ரூல்ஸ்… வாடிக்கையாளர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!