sbi home loans interest :சொந்த வீடு.. பெரிய குடும்பம் தொடங்கி நடுத்தர குடும்பங்கள் வரை பலரின் கனவும் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான். இதற்காக நாம் அனைவரும் முதலில் எடுக்கும் முயற்சி ஹோம் லோன். வங்கிகளில் ஹோம் லோன் வசதியை பயன்படுத்திக் கொண்டு ஒரு வீட்டை கட்டிவிட வேண்டும் என்றே பலரும் திட்டமிடுவார்கள்.
ஆனால், அதை எப்படி முறையாக செய்ய வேண்டும், வீட்டுக்கடனுக்கு எந்தெந்த வங்கிகளில் எவ்வளைவு வட்டி விகிதம் வசூலிப்பார்கள் போன்ற நடைமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதிலும் வீட்டுக் கடனுக்கு பெஸ்ட் வங்கி எது என்ற தேடல் இப்போது வரை பலருக்கும் உள்ளது.
இதற்கு பதில் சொல்லும் விதமாக நாள்தோறும் ஹோம்லோன் வசதி குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று எஸ்பிஐ வங்கியின் ஹோம் லோன் வட்டி குறித்து முழு விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
ரிசர்வ் வங்கி கடந்த மாத நிதிக்கொள்கை அறிவிப்புடன் சேர்த்து மொத்தம் 0.75 சதவீதம் வட்டியை குறைத்தது. இதில் ஸ்டேட் வங்கி தற்போது ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் வட்டியை 0.05 சதவீதம் குறைத்து 8.4 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இது இன்று அமலுக்கு வருகிறது. இத்துடன் கடந்த ஏப்ரலில் இருந்து 3 முறை இந்த வங்கி வட்டியை குறைத்துள்ளது.
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி தனது கடன் திட்டங்கள் மீதான குறைந்தபட்ச வட்டியை 5 புள்ளிகள் (0.5 சதவீதம்) குறைத்துள்ளது. அதாவது 8.45 சதவீதமாக இருந்த குறைந்தபட்ச வட்டி விகிதம் தற்போது 8.40 சதவீதமாக மாறியுள்ளது.
சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் உயர்வு.. எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பால் ஹாப்பியோ ஹாப்பி!
குறுகிய கால கடன் திட்டங்கள் முதல் நீண்ட கால கடன் திட்டங்கள் வரை அனைத்து திட்டங்களுக்கும் குறைந்தபட்ச வட்டி விகிதம் 5 புள்ளிகள் குறைகிறது. ஜூன் மாதம் 5ஆம் தேதி ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ரெபோ வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதன் மூலம் தற்போதைய ரெபோ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக இருக்கிறது. ரெபோ வட்டி விகிதம் குறைந்ததைத் தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி தனது வீட்டுக்கடன் திட்டங்களை ஏற்கெ ரெபோ வட்டி விகிதத்துடன் இணைத்துள்ளது.