எஸ்.பி.ஐ. இருக்க பயமேன்..! வீட்டுக் கடன் சுலப வழிகள்

SBI Home loan : இந்தியாவில் மிகப்பெரிய அடமானக் கடன் வழங்குபவர் எஸ்பிஐ வீட்டுக் கடன்கள். வங்கி, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு வீட்டை சொந்தமாக்க வேண்டும் என்ற கனவை அடைய உதவியுள்ளது.

By: Updated: April 22, 2020, 09:03:15 PM

SBI Home Loans: இந்தியாவில் மிகப்பெரிய அடமானக் கடன் வழங்குபவர் எஸ்பிஐ வீட்டுக் கடன்கள். வங்கி, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு வீட்டை சொந்தமாக்க வேண்டும் என்ற கனவை அடைய உதவியுள்ளது. நீங்கள் வீட்டு கடன் வாங்க தேடுகிறீர்களா ? வீட்டு கடன் வாங்க தேவையான தகுதிகள், வட்டி விகிதங்கள், கட்டணம் மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றி பார்க்கலாம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

அம்சங்கள்

ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் தேவையான வீட்டு கடன் தயாரிப்புகள்
குறைந்த வட்டி விகிதம்
குறைந்த செயலாக்க கட்டணம்.
எந்தவித மறைமுக கட்டணமும் இல்லை
முன் கட்டண (Pre Payment) அபராதம் இல்லை
தினசரி குறைப்பு இருப்பு மீதான வட்டி கட்டணங்கள்
30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்துதல்
வீட்டுக் கடன் ஓவர் டிராப்டாக கிடைக்கிறது
பெண் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி சலுகை

தகுதிகள்

குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகப்பட்ச வயது 70 ஆகவும் இருக்க வேண்டும்
இந்திய குடியுரிமையுடையவராக இருக்க வேண்டும்.
கடன் காலம் 30 ஆண்டுகள் வரை

வட்டி விகிதம்

முழு விவரங்கள்

https://homeloans.sbi/downloads/INTEREST%20RATE%20W.E.F%20FROM%2001.01.2…

தேவையான ஆவணங்கள்

ஆவணங்களின் பட்டியல்/ அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும் ஆவணங்கள்
பணியாளர் அடையாள அட்டை
கடன் விண்ணப்பம் : பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்ப படிவம் முறையாக நிரப்பப்பட்டது, 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஒட்டப்பட்டது.
அடையாள சான்று (ஏதாவது ஒன்று): நிரந்தர கணக்கு எண் (PAN), கடவுச்சீட்டு (Passport), ஓட்டுனர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை.
முகவரிச் சான்று (ஏதாவது ஒன்று): தொலைபேசி கட்டண ரசீதின் சமீபத்திய நகல்/ மின் கட்டண ரசீது/ குடிநீர் கட்டண ரசீது/ சமையல் எரிவாயு ரசீது அல்லது கடவுச்சீட்டு/ ஓட்டுனர் உரிமம் அல்லது ஆதார் அட்டை நகல்

சொத்து ஆவணம்:

கட்டுமானத்திற்கான அனுமதி
விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் (மகாராஷ்டிராவுக்கு மட்டும்)
Occupancy Certificate, Share Certificate, Approved Plan copy

கணக்கு அறிக்கை:

விண்ணப்பதாரரின் கழிந்த ஆறு மாத கால அனைத்து வங்கி கணக்கு அறிக்கைகள்.
வேறு ஏதாவது வங்கியிலிருந்து கடன் வாங்கியிருந்தால் அதற்கான கடந்த ஒரு வருட அறிக்கை.
மாத ஊதியம் வாங்கும் விண்ணப்பதாரராக இருந்தால் வருமான சான்று
ஊதிய Slip அல்லது மூன்று மாதத்துக்கான ஊதிய சான்று
கழிந்த இரண்டு வருடங்களுக்கான Form 16 நகல் அல்லது இரண்டு நிதியாண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் நகல் வருமான வரித்துறையால் சான்றழிக்கப்பட்டது.
வருமான சான்று- ஊதியம் பெறாத பிரிவினர்களுக்கு.

வணிக முகவரி ஆதாரம்

மூன்று வருடங்களுக்கான வருமான வரி தாக்கல்
Balance Sheet மற்றும் 3 வருடத்துக்கான லாப நஷ்ட கணக்கு
வணிக உரிம விவரங்கள் (அல்லது அதற்கு இணையானது)
TDS Certificate (Form 16A, if applicable)
Certificate of qualification (for C.A./ Doctor and other professionals).

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi home loans sbi home loan interest rates sbi home loan new interest rates sbi home loan features

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X