Advertisment

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் எஸ்.பி.ஐ வழங்கும் வீட்டு லோன்கள் ஒரு பார்வை

சம்பாத்தியம் பெரும் தனிநபர்கள் அக்குடும்பத்தில் இருப்பின் அவர்கள் தனியாக கடன் பெறும் வசதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi state bank of india sbi savings account - எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்

sbi state bank of india sbi savings account - எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்

SBI home loans : இந்தியாவில் வாழும் அனைவருக்கும் சொந்த வீடு என்ற இலக்கை எட்டுவதற்காக கொண்டுவரப்பட்டது தான் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா. இந்த திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் தங்களுக்கென ஒரு சொந்த வீட்டினை வாங்கிக் கொள்ளவோ கட்டிக் கொள்ளவோ இயலும்.

Advertisment

SBI home loans under PMAY

அவர்களுக்கு உதவும் வகையில், ஆர்.பி.ஐ ஒரு புதிய விதிமுறையை கொண்டு வந்தது. அதன்படி 30 லட்சம் ரூபாய் வரையில் ஹோம் லோன் வாங்கும் வாடிக்கையாளர்களின் ஈ.எம்.ஐ மற்றும் வட்டி விகிதம் என இரண்டையும் கணிசமாக குறைத்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களும், குறைவான வருமானம் பெரும் நபர்களும் தங்களுக்கான ஹோம் லோனிற்கான மானியத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தகுதிகள் என்னென்ன ?

CLSS

இத்திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் 3 லட்சம் பெறும் EWS கேட்டகிரியினரும், 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வருமானம் பெறும் LIG கேட்டகிரியினரும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தங்களில் வீடுகளைக் கட்ட 2.20 லட்சம் வரை மானியம் பெறலாம்.

லோனின் முதிர்வு 15 வருடங்கள் என்பவர்களுக்கு மட்டும் இத்திட்டம் பொருந்தும்.

Revised CLSS

லோனை திருப்பிச் செலுத்த 15 முதல் 20 ஆண்டுகள் வரை உள்ள ஸ்கீமைப் பெறுபவர்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.67 லட்சம் வரை மானியம் பெற இயலும்.

CLSS (MIG-I)

இதன் கீழ் கடன் வாங்கியிருந்தால், 9 லட்சம் வரையிலான கடனிற்கு 4% வரை மானியமும், 12 லட்சம் ரூபாய் வரையிலான கடனிற்கு 3% மானியமும் வழங்கப்படும்.

9 முதல் 12 லட்சத்திற்கும் மேலாக கடன்களை வங்கிகள் வழங்கினாலும் இந்த மானியமானது 9-12 லட்சம் கடன் தொகைக்கு மட்டுமே பொருந்தும்.

மானியத்திற்கான உச்ச வரம்பு - ரூ.2.35 லட்சம் ( CLSS-MIG(I) - கேட்டகிரிக்கு)

மானியத்திற்கான உச்ச வரம்பு - ரூ.2.30 லட்சம் ( CLSS-MIG(II) - கேட்டகிரிக்கு)

இந்த கடன் கணவன், மனைவி, மற்றும் குழந்ந்தைகள் உள்ள குடும்பத்திற்கு வழங்கப்படும். சம்பாத்தியம் பெரும் தனிநபர்கள் அக்குடும்பத்தில் இருப்பின் அவர்கள் தனியாக கடன் பெறும் வசதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : ஜீரோ பேலன்சில் உங்கள் குழந்தைகளுக்கான வங்கி சேமிப்புத் திட்டங்கள்

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment