sbi housing loan interest : பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கி இதே மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு அறிவிப்பை வெளியிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள்து.
ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் வட்டியை பாரத ஸ்டேட் வங்கி 5 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதன்படி, ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் வட்டி, 8.5 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதம் ஆகியுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே, எம்சிஎல்ஆரில் இணைந்த கடன்கள் மேற்கண்ட வட்டி விகிதத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும் என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ ஏப்ரல் மாதம் 10-ம் தேதி MCLR வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்தது. தற்போது மீண்டும் மே 9-ம் தேதி முதல் MCLR வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் எஸ்பிஐ குறைத்துள்ளது.
இத்துடன் இந்த வங்கி கடந்த ஒரு மாதத்தில் 2வது முறையாக வட்டியை குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததற்கு ஏற்ப எச்டிஎப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவையும் வட்டியை குறைத்துள்ளன. பாங்க் ஆப் பரோடா கடந்த வாரம் எம்சிஎல்ஆர் வட்டியை 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது கடந்த 7ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
மினிமம் பேலன்ஸ் பிரச்சனை எஸ்பிஐ கஸ்டமர்ஸூக்கு மட்டும் இல்லப்பா!
அடிப்படை வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் மே 10-ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன், வாகனக் கடன் மீதான மாத தவணை குறையும்.