வீடு வாங்க போறீங்களா? அவசர காலத்திற்கு எஸ்பிஐ வங்கியில் வீட்டு லோன்

ஜூலை 2019-க்குப் பின் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே ஆர்பிஐயின் ரெப்போ ரேட் வட்டி அடிப்படையில் கடன்கள் கிடைத்தன

SBI Home Loan: ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கும் வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப்போகிறது எஸ்.பி.ஐ வங்கி.

மத்திய மைய கட்டுப்பாட்டு வங்கியின் ரெப்போ ரேட் வட்டி விகித அடிப்படையில் முன்னதாக எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க தீர்மானிக்க உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

இதனால் வங்கியில் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கைஇ 2019- 20 நடப்பாண்டில் இரண்டாவது அரையாண்டிலாவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜூலை 2019-க்குப் பின் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே ஆர்பிஐயின் ரெப்போ ரேட் வட்டி அடிப்படையில் கடன்கள் கிடைத்தன.

ஜூலை 2019-க்கு முன் வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு ஆர்பிஐயின் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைக்கவில்லை.

ஜூலை 2019-க்கு முன்இ 75 லட்சம் ரூபாய்க்குள் வாங்கிய வீட்டுக் கடன்களுக்குஇ 8.35 சதவிகிதம் முதல் 8.90 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கப்பட்டது. இது முந்தைய Marginal Cost of Funds based Lending Rate அடிப்படையில் கணக்கிடப்பட்டவை.

ரெப்போ ரேட் அடிப்படையிலான வட்டி விகிதத்தை அனைத்து வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கும் அமல்படுத்தினால் சுமாராக 8.05 முதல் 8.20க்குள் வீட்டுக் கடன் வாங்கலாம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close