sbi-credit-card-customer | ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ கார்டு, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் கிரெடிட் கார்டுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.
ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி வங்கி ரெகேலியா (Regalia) மற்றும் மிலினியா (Millenia) கிரெடிட் கார்டுகளில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், ஒரு காலாண்டில் ரூ. 1 லட்சத்தை செலவழித்தால், லவுஞ்ச் அணுகலைப் பெற, முதலில் Regalia SmartBuy பக்கத்திற்குச் செல்ல வேண்டும், இங்கிருந்து லவுஞ்ச் நன்மைகள் விருப்பத்திற்குச் சென்று லவுஞ்ச் அணுகல் வவுச்சரைப் பெறலாம்.
மில்லினியா மைல்ஸ்டோன் கார்டுகளில் ஒரு காலாண்டுக்கு ஒரு Lounge Access Voucher கிடைக்கும்.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி தனது 21 கிரெடிட் கார்டுகளில் விமான நிலைய ஓய்வறை அணுகுவதற்கான விதிகளை மாற்றுகிறது, இது ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும், ஒரு காலண்டர் காலாண்டில் குறைந்தபட்சம் ரூ.35,000 செலவழிக்க வேண்டும்.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி அதன் மேக்னஸ் கிரெடிட் கார்டு நன்மைகள் மற்றும் வருடாந்திர கட்டணம் மற்றும் சேரும் பரிசுகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. வங்கி தனது ஆக்சிஸ் வங்கி ரிசர்வ் கிரெடிட் கார்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றியுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ)
Paytm SBI கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கான கேஷ்பேக் வெகுமதிகள் ஜனவரி 1, 2024 முதல் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“