வங்கி சேமிப்பு கணக்கின் புதிய பரிமாணம் – அசத்தும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

SBI insta savings account : யோனோ மொபைல் ஆப் மற்றும் யோனோ வெப் போர்டலின் மூலம், இன்ஸ்டா சேவிங்ஸ் அக்கவுண்டை எளிதில் துவக்க முடியும்.

sbi news, sbi.com, sbionline.com in, ஸ்டேட் வங்கி, எஸ்.பி.ஐ., பாரத ஸ்டேட் வங்கி, State Bank of India
SBI Online News, SBI Online Tamil News, SBI Online Tamil Nadu News, State Bank Of India, பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் வங்கி

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இன்ஸ்டா சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

18 வயது நிரம்பிய அனைவரும் இந்த திட்டத்தின்கீழ் உடனடியாக சேமிப்பு கணக்கை துவங்க வழிவகை ஏற்பட்டுள்ளது. வங்கியின் தொடர்பு இல்லாமல் இந்த புதிய திட்டத்தின் மூலம் வங்கி சேமிப்பு கணக்கை துவங்கமுடியும். ஆதார் எண், பான் எண், ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், பயன்பாட்டில் உள்ள இ மெயில் முகவரி உள்ளிட்டவைகள் இருந்தாலே, இந்த இன்ஸ்டா வங்கி சேமிப்பு கணக்கை துவங்க முடியும்.

யோனோ மொபைல் ஆப் மற்றும் யோனோ வெப் போர்டலின் மூலம், இன்ஸ்டா சேவிங்ஸ் அக்கவுண்டை எளிதில் துவக்க முடியும்.
ஒரு பெயரை கொண்டு இந்த இன்ஸ்டா சேவிங்ஸை துவக்க முடியும். ஒரே நேரத்தில் ரூ49,999 வரை பணபரிவர்த்ததனை மேற்கொள்ள முடியும். ரூ.1 லட்சம் வரை பேலன்சை வைத்திருக்க முடியும். சாதாரணம சேமிப்பு கணக்கு போன்று, இதிலும் சில வழிமுறைகள் உள்ளன.

இன்ஸ்டா வங்கி சேமிப்பு கணக்கு திட்டத்தில் இணைபவர்களுக்கு ருபே ஏடிஎம் கார்டு தரப்படும். ஆனால் பாஸ்புக், செக் புக், உள்ளிட்டவைகள் தரப்பட மாட்டாது. இருந்தபோதிலும் அவர்களுக்கு ஆடியோ வகையிலான அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் மெயில் மூலம் அனுப்பிவைக்கப்படும். இன்ஸ்டா வங்கி சேமிப்பு கணக்கு துவங்கும்போது குறிப்பிடப்படும் வங்கி கிளை தான், ஹோம் பிராஞ்சாக அங்கீகரிக்கப்படும். ஒரு ஆளை, நாமினேட் செய்யலாம் என்று எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi insta digital savings account check eligibility limits benefits

Next Story
பான் கார்டு எண் தவறாக அளித்தால் என்ன தண்டனை தெரியுமா?pan card, number, misuse, money transaction, getting salary, land registration, penalty, income tax department
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com